சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 சிம்மம் ராசி by ஜோதிடர் விஸ்வநாதன் | Sani Peyarchi 2020 Simmam Rasi by Astro Viswanathan

சிம்மம் ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023

பொதுவாக நீங்கள் சுறுசுறுப்பானவர்கள்.. ஏனென்றால் சூரியன் ஒரு துரித கிரகம்.. வேகமான கிரகம்.. உங்கள் ராசிநாதனின் குணங்கள் உங்களுக்கும் இருக்கும் என்பதால் நீங்களும் சுறுசுறுப்பானவர்களே.. ஸ்ட்ரெய்ட் பார்வர்டு .. நேர் வழியில் செல்பவர்கள்.. கொஞ்சம் கூட வளைந்து கொடுக்காத சிம்ம ராசிக்காரர்கள், கொஞ்சம் முன்கோபம் உடையவர்கள்.. “சிம்மத்தோன் சீறியே சினந்து நிற்பான்” என்பது பழமொழி.

உங்கள் பேச்சு வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்று இருக்கும்.. பொதுவாக சிம்ம ராசிக்காரர்கள் அடிமைத்தொழில் செய்யமாட்டார்கள்… அடிமைத்தொழில் இவர்களுக்கு ஒத்துவராது.. ஏனென்றால் சூரியனை ராசியாக கொண்டவர்கள் என்பதால் அடுத்தவர்களுக்கு வேலை சொல்லியே, அதிகாரம் செய்தே பழக்கப்பட்டவர்கள் என்பதால் இவர்களை அடுத்தவர்கள் அதிகாரம் செய்ய முடியாது….

இவர்கள் எப்போதும் சொந்தக்காலில் நிற்பார்கள் ..இவர்களுக்கு பந்தக்கால், இரவல் கால் தேவைப்படாது. உங்கள் ராசியின் சின்னம் சிங்கம்… எனவே சிங்கத்தின் கம்பீரம் உங்களுக்கு இருந்தே தீரும்.. கௌரவம் குறையும் படியான எந்தவிதமான, புகழுக்கு இழுக்கு தரக்கூடிய எந்தவிதமான காரியத்தையும் செய்யமாட்டீர்கள்..
இவர்களிடம் பணம் வேண்டுமா ?புகழ் வேண்டுமா? என்று இவர்களிடம் கேட்டால் புகழ் வேண்டும் என்று சொல்வார்கள் இவர்களை இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்தால், புகழ்ச்சிக்கும் மயங்கி விடுவார்கள்..

கடந்த காலங்களில சனீஸ்வர பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து தொல்லைகளையும் கஷ்டங்களையும் தந்து வந்தார்…. ஐந்தாமிடத்தில் சனி இருக்கக்கூடாது…. ஐந்தாமிடத்தில் சனி இருந்தால் போன ஜென்மத்தில் பாவங்கள் அதிகம் செய்தவர்கள்….. ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் போன ஜென்மத்தில் புண்ணியம் அதிகம் செய்தவர்கள்…. குரு 5ல் இருப்பது புண்ணியத்தின் பலனாக நல்ல பலன்களும் ,சனி 5-ல் நின்றால் பாவத்தின் பலனாக கெட்ட அனுகூலமற்ற பலன்களும் நடைபெறும்…

எதிர்வரும் 24 .1.. 2020 அன்று உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் சனி பகவான் மிக மிக நல்ல அனுகூலமான, சாதகமான, முன்னேற்றமான பலன்களை உங்களுக்கு தரக் காத்துக்கொண்டு இருக்கிறார்‌…. பொதுவாக சனி 3, 6 ,11 இந்த இடங்களில் இருந்தால் மட்டுமே சனியால் நன்மைகள் இருக்கும்.

வருஷாதி நூல் என்ன சொல்லுது அப்படின்னா ,
“ஆறு, பன்னொன்பான் மூன்றில் அந்தகன் நிற்குமாயின்;
கூறு பொன் பொருள் மிக உண்டாம்: குறைவில்லா செல்வம் உண்டாகும்;
ஏறு பல்லக்குமுண்டாம் ;
இடம் பொருளே வலுவுண்டாம் .;..
காருபால் அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும் தானே;”

அந்தகன்னா சனி ஆறு , பதினொன்று, மூன்று இந்த இடங்களில் சனி சஞ்சரிக்கும் போது, பொன் பொருள் சேர்க்கைகளும் உண்டாகும்.. நகைகள் வாங்க கூடிய யோகம் உண்டாகும்.. லட்சுமி கடாட்சம் உண்டாகும் …கார் மாதிரியான, பைக் மாதிரியான வாகனங்கள் வாங்க கூடிய யோகம் உண்டாகும். அஷ்டலட்சுமி யோகத்தால் உங்களுக்கு விரயங்கள் குறைந்து தண்டச் செலவுகள் குறைந்து,, வருமானம் அதிகமாகி ,,செலவுகள் குறைந்து ,,உபரி பணம் மிச்சமாகும்.. அதனால் நீங்கள் சேமிக்க முடியும்..

இன்னொரு ஆண்டு கிரகமான குரு பகவான் சிம்மத்துக்கு ஐந்தாம் வீட்டில் மூலத்திரிகோண பலத்துடன் மிக வலுவாக உங்கள் ராசியை பார்த்துக்கொண்டு இருக்கிறார்… எனவே உங்கள் தன்னம்பிக்கை லெவல் உச்சத்திலிருக்கும்…. எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்க்கும்.. உங்கள் ராசியை குரு வலுவாக பார்ப்பதால் உங்களுடைய தோற்றப்பொலிவு கூடும்.. உங்களுடைய சமுதாய அந்தஸ்து உயரும்.. உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும்..

உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடம் குருவின் இருப்பால் பலம் பெறுகிறது… உங்கள் ராசி குருவின் வலுத்த பார்வையால் பலம் பெறுகிறது …உங்களுடைய ஒன்பதாமிடம் குருவின் ஐந்தாம் பார்வையால் பலம் அடைகிறது… 1, 5, 9 போன்ற திரிகோண ஸ்தானங்கள்,, லட்சுமி ஸ்தானங்கள் வலுப்பெறுவதால் உங்களுக்கு பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும்… குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் வலுவாக இருந்து ,,உங்கள் ராசியையும்,, 9-ஆம் இடத்தையும் பார்வையிடுவதால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கப்பெறும்…சம்பள உயர்வு கிடைக்கப்பெறும் ..விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம் உண்டாகும்… அந்த இடம் மாற்றத்தினால் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு ,,முன்னேற்றம் உண்டாகும்.. மாற்றம் ,,முன்னேற்றம் என்பது உங்களுக்கு மட்டுமே பொருந்தும்..

இப்போது நேரம் நன்றாக இருப்பதால் நீங்கள் என்ன செய்தாலும் ஜெயிக்கும் புதிய தொழில் முயற்சிகள் செய்யலாம்..
உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் .‌வீடு கட்டலாம்.. திருமணம் போன்ற சுபகாரியங்கள் வீட்டில் தங்குதடையின்றி நடைபெறும்… திருமணம் ஆகாத ஆண் பெண் இருபாலருக்கும் திருமணம் வெகுவிமரிசையாக ,பலரும் பாராட்டும் படி ஆடம்பரமாக அமோகமாக நடந்து முடியும்..

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்.. சுய ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தைத் தரக்கூடிய ஐந்தாம் இடம், ஐந்தாம் அதிபதி, ஐந்தாம் இடத்தில் இருக்கும் கிரகங்கள், குரு பகவான் இவர்களின் தசை, புக்தி அந்தரம் நடக்கும் போது இந்த பலன் நிச்சயமாகப் பொருந்தும்.. குழந்தை பாக்கியம் தங்கு தடையின்றி கிடைத்துவிடும் ‌.. 100 சதவீதம் நடக்கும்…

வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்துவிடும் …சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்…
சனி 6-ல் இருப்பதால் அதுவும் ஆட்சி பலம் பெறுவதால் வலுவாக இருப்பதால் ஆறாம் இடமான கடன் ,நோய், எதிரி, வம்பு ,வழக்கு, அவமானம் அசிங்கம் கேவலம் போன்ற காரகங்களை சனி கெடுத்து கடன் ,நோய் ,எதிரி ,வம்பு வழக்கு, அவமானம், அசிங்கம் ,கேவலம் இல்லாத நல்ல வாழ்க்கை தருவார்.

இன்னும் மூன்று வருடங்களுக்கு கடன் இருந்தாலும் கட்டிவிடலாம்… இதற்கு முன்னாடி நோய் இருந்திருந்தாலும்,, குருவின் பார்வை பலத்தாலும்,சனியின் ஆறாமிட ,ஸ்தான பலத்தாலும், ராகு பதினொன்றில் சுபத்தன்மையுடன் இந்த வருடம் இறுதிவரை சஞ்சரிப்பதாலும் நோய் தீர்ந்துவிடும் …உங்களுக்கு ஏதாவது வழக்கு இருந்த இருந்தாலும் அதில் உங்களுக்கே அந்த வழக்கில் வெற்றி கிட்டும்.. அரசாங்கமே உங்கள் மேல் வழக்கு போட்டாலும் அந்த அரசாங்கமே உங்களிடம் தோற்றுவிடும்..

சிம்ம ராசி அரசியல்வாதிகள், பெயர் புகழ், அந்தஸ்து, கௌரவம், பதவி அனைத்தையும் அடைவார்கள்… சிம்மராசி அரசியல்வாதிகளுக்கு வெற்றிகிட்டும்.. சனி ஆறாம் இடத்திலும், ராகு 11ம் இடத்திலும் , குருபகவான் ஐந்தாம் இடத்திலும் சஞ்சரிக்கும் அற்புதமான காலம் இது.. அரசியல்வாதிகளுக்கு இது ஒரு பொன்னான நேரம் …பொதுமக்களிடம் நல்ல மரியாதை இருந்து வரும்…

மாணவர்கள் நன்கு படித்து தேர்வு பெறுவர்… போட்டித் தேர்வு எழுதும் மாணவர்கள் நன்கு தேர்ச்சி பெறுவர்… மாணவர்கள் எதிர்பார்த்ததைவிட கூடுதல் மதிப்பெண்கள் கிடைக்கப்பெறுவர் …விவசாயிகள் நல்ல மகசூலை அடைவார்… குடும்பத்தில் கணவன் மனைவி உறவு அந்நியோன்யம் மிக நன்றாக இருக்கும்.
பெண்கள் தன் கணவன், மாமனார் மாமியார் ,சொந்தபந்தம் இவர்களிடம் நல்ல பெயர் எடுப்பார்கள். பூர்வீகச் சொத்தில் ஏதாவது வில்லங்கங்கள் பிரச்சனைகள் இருந்தால் அத்தனையும் விலகும் ..பாகப்பிரிவினைகள் சுமுகமாக நடந்து உங்களுடைய பங்கு உங்களுக்கு கிடைக்கப் பெறும்..

குரு பகவான் இந்த வருடம் நவம்பர் வரை உங்களுக்கு சாதகமான பலன்களையும், ராகுபகவான் 23. 9. 2020 வரை லாப ஸ்தானத்திலும், சனிபகவான் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்கு நன்றாக சஞ்சாரம் செய்வதால் ,உங்களுக்கு அபரிவிதமான நல்ல பலன்கள் நிச்சயம் கிடைக்கும்… தசாபுத்தி சாதகமாக இல்லாத பட்சத்திலும், கோட்சார பலத்தின் காரணமாக நீங்கள், சிம்மராசி காரர்கள் அத்துணை பிரச்சனையும் சமாளித்து விடுவீர்கள்.

சனி பகவான் சஞ்சாரம் செய்யும் ஆறாம் இடத்தில் , ராசிக்கு யோகர் களான சூரியனின் சந்திரனின் செவ்வாயின் சாரங்கள் இருப்பது இன்னும் இந்த யோக பலனை கூட்டுவதாகவே அமையும். ஆறாமிடத்து சனியால் பல சகாயங்களும், மூன்றாவது மனிதர்கள் உதவியும், அரசாங்க உதவியும் உங்களுக்கு கிடைக்கும். நேரம் நன்றாக இருக்கிறது பயன்படுத்திக்கொள்ளுங்கள் நேரம் நன்றாக இருக்கும்போது சம்பாதித்து வைத்துக்கொண்டாள்ல், நேரம் சரியில்லாத காலங்களில் அதை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்… காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுங்கள்… வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் ….அதிர்ஷ்டம் இருக்கும்போது அதை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Blog at WordPress.com.

%d