சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 துலாம் ராசி by ஜோதிடர் விஸ்வநாதன் | Sani Peyarchi 2020 Kanni Rasi by Astro Viswanathan

துலா ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023

உங்கள் ராசி நாதன் சுக்கிரன்… எனவே சுக்கிரனுடைய குணங்கள் உங்களுக்கு இருக்கும்.. சுகவாசி நீங்கள்… கொஞ்சம்கூட கஷ்டப்படுவதை விரும்ப மாட்டீர்கள் …சிறு துன்பத்தையும் உங்களால் தாங்க முடியாது.. உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால் சுக்கிரன் உலக இன்பங்களுக்கு அதிபதி. காமத்துக்கு அதிபதி. செல்வத்துக்குஅதிபதி.. மனை என்று சொல்லப்படக்கூடிய சொந்த வீட்டுக்கு காரகன். சுகத்துக்கு காரகரன்.. வாகன காரகன்.

உலகத்தின் ஒட்டுமொத்த சுகங்களை எல்லாம் குத்தகைக்கு எடுத்துள்ள சுக்ரனின் ராசியில் பிறந்த நீங்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பீர்கள்??

வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வாழவேண்டும் என்ற எண்ணம் உள்ள சுக்கிரனின் வீட்டில் பிறந்த நீங்கள், வாழ்க்கை வாழ்வதற்கே !! என்னத்த கொண்டு வந்தோம்? என்னத்த கொண்டு போகப் போகிறோம் ?நாம நமக்காக வாழனும் ..ஊர் என்ன சொன்னா என்ன? மண்ணு திங்கற உடம்ப மனுசன் தின்னா என்ன?? என்ற ரீதியில் இவர்களுடைய சிந்தனை செயல் இருக்கும்…

ஆடம்பரப் பிரியர்கள்… உங்கள் ராசியின் சின்னம் தராசு ..தராசுவை சின்னமாக கொண்ட துலாம் ராசிக்காரர்கள், எதிலும் கணக்குப் பார்த்து செலவு செய்வார்கள்… ஆனால் பெண்கள் என்று வந்துவிட்டால் அவர்கள் மெச்ச வேண்டும் என்று அவர்களுக்கு அதிகம் செலவு செய்வார்கள்.. இவர்கள் விளம்பரப் பிரியர்கள்… அதாவது ஏதாவது ஒரு பொது சேவை செய்தாலும் அதிலேயும் விளம்பரம் செய்து தன்னுடைய பெயரை காப்பாற்றிக் கொள்வார்கள்..

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி பல சகாயங்களை,,நன்மைகளை சாதகமான பலன்களை கொடுத்து வந்த நிலையில் அடுத்து நான்காம் இடமான அஷ்டம சனியாக சனி பெயர்ச்சி அடையும் போது உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பலன்கள் இருக்கும்??

“பன்னிரண் டொன்பது
பத்து ஏழும், பகரைந்து,நாலிலெட்டில்
சனியனே யிருந்தால் துன்பம்
சஞ்சலம் துக்கமுண்டாகும்
முனிவனால் மூர்க்கரோடு
மூன்றிடும் கலகத்தால்
மனோவிசாரத்தாலே
மறுநகரம் ஓடுவாரே”

12,9,10,7,5,4,8 போன்ற இடங்களில் சனி சஞ்சரிக்கும் காலங்களில் பல விதமான கஷ்டங்களும், கவலைகளும், சஞ்சலமும் திகிலும், பயங்கரமும், பகைவர் துன்பங்களும், பித்த வியாதியும், துக்கமும், துன்பமும், துயரமும், வியாபாரத்தில் கஷ்டமும், உத்தியோகத்தில் கலக்கமும், மன சஞ்சலமும், குடும்ப கலகமும் பொருந்தியிருக்கும் என்று இந்தப் பாடல் சொன்னாலும் ,

உங்கள் ராசிக்கு சனி என்ன ஆதிபத்தியம் வாங்குகிறார் என்று பார்த்தாதோமானால் அவர் முக்கியமான சதுர்த்த கேந்திரம் எனும் நான்காம் ஆதிபத்தியம், பஞ்சம திரிகோணம், எனும் ஐந்தாம் ஆதிபத்தியம் வாங்குவதால் பெரிய அளவில் கெடுதல்கள் இருக்காது…

இது அர்த்தாஷ்டம சனி என்று அழைக்கப்படுகிறது.. இதனால் அலைச்சல் அதிரிக்கும்… டென்ஷன் அதிகரிக்கும்.. நான்காம் இடம் சுக ஸ்தானம் என்பதால் சுக சுகவாழ்வை அனுபவிப்பதில் சிக்கல் தடைகள் ஏற்படும்… நான்காம் இடம் வாகன ஸ்தானம் என்பதால் உங்கள் வாகனங்கள் மூலமாக தேவையற்ற செலவுகளைஅர்த்தாஷ்டமச் சனியால் நீங்கள் சந்திப்பீர்கள்.

தேவையற்ற பயணங்கள், அலைச்சல் அலைக்கழிப்புகள் உங்களுக்கு இருக்கும்… நான்காம் இடமான தாயார் காலத்தில் சனி இருப்பதால் தாய்க்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் ..தாய் ஸ்தானத்தை சனி கெடுக்கிறார்… என்னதான் உங்கள் ராசிக்கு சனி யோகர் சுபர் என்றாலும் ,நான்காம் இடமான அர்த்தாஷ்டம சனி , என்றால் என்னவென்று உங்களுக்கு கொஞ்சம் புரிய வைப்பார்.

நான்காமிடத்தில் சனி இருப்பதால் வீடுகட்டிக் கொண்டிருக்கும் சிலருக்கு வீடு சீக்கிரத்தில் முடியாது.. சனி நான்காம் இடத்தில் இருந்து பத்தாம் இடமான தொழில் ஜீவன ஸ்தானத்தை பார்த்து தொழில் ஜீவனம் மூலமாக உங்களுக்கு பிரச்சனை தருவார். ஆனால் நவம்பர் மாதத்திற்கு பிறகு குரு உடன் இணையும் சனி சுபத்தன்மை அடைவதால் தொழில் மற்றும் வேலை போன்றவற்றில் லாபங்களை தருவார் இது உங்களுக்கு நவம்பர் மாதம் வரைதான் இந்த கஷ்டமெல்லாம் இருக்கும்.

நவம்பர் மாதத்திற்கு பிறகு குருவுடன் உடன் சனி இணைவதால் சனி சுபத்தன்மை அடைந்து சனியால் பல நன்மைகள் இருக்கும் வண்டி வாகனம் தாயார் குழந்தைகள் போன்ற விஷயங்களில் லாபங்களும் முன்னேற்றங்களும் இருக்கும் பொதுவாக என்னதான் சனி ராஜயோகாதிபதியாக இருந்தாலும் அவர் தனித்து ஆட்சி பெற்று இருப்பது குற்றமே ‌. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

சனிபகவான் ஒரு ராசிக்கு அல்லது லக்னத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், அவர் வேறு ஏதாவது சுப கிரகத்துடன் இணைந்து இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியவிதி… முக்கியமாக தனக்கு அருகில் இருக்கும் குரு பகவானுடன் இணைந்து இருப்பது, அல்லது தனது நண்பர்களான சுக்கிரன் புதன் இவர்களுடன் இணைந்து இருப்பது, அல்லது இவர்களின் பார்வை பெறுவது, நல்லவருஉடன் சேர்ந்து தானும் நல்லவராக மாறி, அவருடைய பார்வைகளால் அவர் இருக்கும் இடத்தினாலும் மிகப்பெரிய லாபம் மேன் மைகளை ,யோகங்களைச் செய்வார்..

தற்போது குருபகவான் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்த்து, ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்த்து ,ஐந்தாம் பார்வையாக ஏழாம் இடத்தை பார்த்துக் கொண்டிருப்பதால் உங்களுக்கு குருவின் பார்வையால் நன்மைகள் உண்டு..

குடும்ப ஒற்றுமைக்கு பிரச்சனை இல்லே. பண வரவுகளுக்கு பிரச்சனை இல்லை…
தைரியத்திற்கும் பிரச்சனை இல்லை.
ஆனால் அலைச்சல் டென்ஷன் அலைக்கழிப்பு இருக்கும்… தொழில் வேலை ஜீவனம் போன்ற விஷயங்களில் சனியின் பார்வையால் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதுமானது..
வீடு கட்டி கொண்டிருப்பவர்களுக்கு நவம்பர் மாதத்திற்கு மேல் சொந்த வீடு ரொம்ப வலுவாக அமைந்துவிடும்..
தகப்பனார் உறவு அவருடைய ஆதரவு சப்போர்ட் நன்றாக உள்ளது. ஆனால் தாய்க்கு சில பிரச்சனைகள் தொல்லைகள் உள்ளது.. தாயாருக்கு மருத்துவச் செலவுகள் இருக்கும்…வேலை செய்யும் இடங்களில் அலுவலகத்தில் ரொம்ப கவனமாக, வேலையை மட்டும் கண்ணும் கருத்துமாக , விதிகளுக்கு உட்பட்டு, யாரையும் பகைத்துக் கொள்ளாமல், கூட பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்ல இந்த அர்த்தாஷ்டம சனி உங்களை ஒன்றும் செய்யாது.

பழைய வீட்டை விற்று விட்டு புது வீடு வாங்குவது இன்னும் ஒரு பதினோரு மாத காலத்திற்கு ஒத்தி வையுங்கள்
வீடு விற்பது போன்ற முக்கிய விஷயங்களை இன்னும் ஒரு பதினொருஒரு மாத காலத்திற்கு எடுக்க வேண்டாம் …ஏனென்றால் அந்த வீடு விற்ற காசு பஞ்சாக பறந்துவிடும்… அப்புறம் நீங்கள் வாடகை வீட்டில் குடியிருக்க வேண்டிவரும் ..சிலர் சொந்த வீடு இருக்க இந்த வாடகை வீட்டில் சென்று கஷ்டப்படுவது இந்த அர்த்தாஷ்டமச் சனியால் தான்..

அர்த்தாஷ்டமச் சனியின் முக்கிய பலனே என்னவென்றால் இடமாற்றம்… ஏதாவது மாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் , இடமாற்றம், கண்டிப்பாக இருந்தே தீரும்..
பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது ஜாமீன் கொடுப்பது கடன் வாங்கி, இன்னொருவருக்கு கடன் கொடுப்பது போன்ற வற்றை தவிர்க்கவும்.

மாணவர்கள் படிப்பில் அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு மன தடுமாற்றம் இருக்கும்.. விரக்தி மனப்பான்மை ஏற்படும்.. மாணவர்கள் நவம்பர் மாதத்திற்கு பிறகு நன்றாக படிப்பார்கள்.. நவம்பர் மாதத்திற்கு பிறகு வீட்டில் சுபகாரியங்கள் மிகச் சிறப்பாக நடந்தேறும்.. நவம்பர் மாதத்திற்கு பிறகு எல்லாவற்றிலும் இருந்து இருந்த தடைகள் விலகும் …நவம்பர் மாதத்திற்கு பிறகு விவசாயிகளுக்கு லாப மேன்மைகள் ஏற்படும் ..நவம்பர் மாதத்திற்கு பிறகு வேலைப்பளு குறையும்.. நவம்பர் மாதத்திற்கு பிறகு தாயாருக்கும் நன்றாக இருக்கும்..

என்ன இருந்தாலும் சனி உங்களுக்கு உங்கள் ராசிக்கு, நான்கு ஐந்து க்குரிய கேந்திர ,திரிகோண ராஜ யோகாதிபதி என்பதால் உங்கள் ராசிநாதன் சுக்கிரனுக்கு அவர் நட்பு கிரகம் என்பதால் பெரிய அளவில் கெடுதல்கள் இருக்காது …மற்றராசிக்காரர்களைபோல் அர்த்தாஷ்டம சனி பெரிய அளவில் பாதிப்பை தராது. கெடுதல்கள் இருக்காது.. சமாளித்துவிடுவீர்கள்.. அரசியல்வாதிகள் நவம்பர் மாதத்திற்கு பிறகு மக்களிடம் செல்வாக்கு.நற்பெயர் பெறுவார்கள்.. பதவி உயர்வு ,பதவி அனைத்தையும் பெறுவார்கள்..

பரிகாரமாக மகாலட்சுமி வழிபாடு செய்து கொள்வது ,ஸ்ரீரங்கம் சென்று வருவது நங்கநல்லூர் ஆஞ்சநேயர் பெருமாள் சுவாமி சன்னதிக்கு சென்று வருவது பரிகாரமாகும்.

Blog at WordPress.com.

%d