சனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023 விருச்சிகம் ராசி by ஜோதிடர் விஸ்வநாதன் | Sani Peyarchi 2020 Vrischika Rasi by Astro Viswanathan

விருச்சிக ராசி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020 to 2023

செவ்வாயின் ராசியில் பிறந்த நீங்கள் செவ்வாயின் குணங்களை பிரதிபலிப்பீர்கள்.. முன் கோபம் இருக்கும். முரட்டுத்தனம் இருக்கும். திடீரென அசுர வேகம் எடுத்து எடுத்த காரியத்தை முடித்து விடுவீர்கள்.. சோம்பேறித்தனம் உங்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. சோம்பேறிகளை கண்டால் ,சும்மா இருப்பவர்களை கண்டால் இவர்களெல்லாரையும் அரசாங்கம் நாடு கடத்தி விட வேண்டும். என்றெல்லாம் யோசிப்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

காட்டுத் தீயின் குணத்தை ஒத்த மேஷ ராசிக்காரர்கள் எதையும் யோசிக்க மாட்டார்கள் …யோசிக்காமல் ஒரு செயலை செய்துவிட்டு பின்பு வருத்தப்படுவார்கள்… யாரு?? மேஷராசிக்காரர்கள்.. ஆனால் விருச்சிக ராசிக்காரர்கள் கொஞ்சம் பயந்த சுபாவம் உள்ளவர்கள் ஏனென்றால் விருச்சிகம் நீர் ராசி என்பதால் விருச்சிக ராசியினர் கோவப்பட்டு பேசிவிட்டு பின்னர் வருத்தப்படுவார்கள்.. கொஞ்சம் யோசித்து முடிவெடுப்பார்கள் மேஷராசிக்காரர்கள் போல எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இருக்கமாட்டார்கள்..

இவர்களுடைய ராசியின் சின்னம் தேள் என்பதால் இவர்களுக்கு பழிவாங்கும் உணர்வு இருக்கும்.. அதுவும் குறிப்பாக இந்த ராசியில் ராகு அல்லது கேது அமர்ந்துவிட்டால் சொல்லவே வேண்டியதில்லை…இவர்களின் நாக்கில் விஷம்தான் உள்ளதோ என்று எண்ணவைக்கும்..தேளுக்கு கொடுக்கில் விஷம்.இவர்களுக்கு நாக்கில் விஷம். பொதுவாக விருச்சிக ராசி கால புருஷனின் எட்டாமிடம் என்பதால் மறைவிடத்தை குறிக்கக்கூடிய ஸ்தானமாகும். எனவே இந்த ராசியில் சனி, செவ்வாய், ராகு போன்ற பாவிகள் அமரக்கூடாது. குருவின் பார்வை தோசங்களை விலக்கும்.

இன்று பெயர்ச்சியாகும் சனி உங்களுக்கு இந்த மாதிரியான முன்னேற்றத்தை மாற்றத்தை தரப்போகிறது என்று பார்ப்போம். இது வரை ஏழரை ஆண்டுகளாக ஏழரைச் சனியால் இந்த விருச்சிக ராசிக்காரர்கள் பட்ட துன்பங்கள் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. துவைத்து காய போட்டுருச்சு. அவரவருக்கு தக்கபடி அவரவர்களின் வயதுக்கு தக்கபடி, அவரவர்களின் உயரத்துக்கு தக்கபடி, உயரமுனா பொருளாதாரம் என்று அர்த்தம்..

ஏழரைச்சனியை மூன்று பிரிவாக பிரிக்கலாம் ராசிக்கு 12-ம் இடத்தில் ,2012,2013,2014 காலங்களில் விரயச் சனியாகவும் அதுவும் உச்ச விரயச்சனி ,துலாமில் சனி உச்சமாக இருக்கும்.. அது சிரசு சனி என்று அழைக்கப்படும் … அது உச்ச விடையங்களை ஏற்படுத்தி இருக்கும்..அடுத்து 2015, 2016, 17
காலங்களில் ஜென்ம சனியாக கடுமையான மனக்குழப்பங்களை தந்தது.. மூன்றாவது 2017,2018,2019 காலங்களில் பாதச்சனியாக , குடும்ப சனியாக நிறைய பொருளாதார பிரச்சினைகளை, குடும்ப பிரச்னைகளை
இரண்டில் உள்ள சனி போக்கு சனியும் , இரண்டு, எட்டில் இருந்த ராகு கேது க்களும் தந்து வந்தார்கள் என்றால் அது கொஞ்சம் கூட மிகையில்லை.

சிலருக்கு குடும்பத்தில் பிரச்சனை, சிலருக்குத் தாங்க முடியாத மன அழுத்தம் ,சிலருக்கு கடுமையான பொருளாதார பிரச்சனை, சிலருக்கு கடன் பிரச்சனை , தொழில் ,வேலை ஜீவனம் போன்ற அத்துணை விஷயங்களிலும் ஏழரைச்சனி இந்த ராசிக்காரர்களை வச்சி செய்தது.நீங்க நல்லதே செய்தாலும் பொல்லாப்பே வந்து சேர்ந்தது.சிலருக்கு வீண்பழி, பொல்லாப்பு ஏழரைச்சனியால் வந்து சேர்ந்தது.

படிக்கிற குழந்தைகளுக்கு படிப்பில் பிரச்சனை, டீன் ஏஜ் பசங்களுக்கு காதல் செய்து அந்த காதல் தோல்வி அடைந்து அதனால் கடுமையான மன அழுத்தம்… 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு திருமணம் ஆகாமல் தாமதப்பட்டு அதன் மூலமாக மனவருத்தங்கள் .. முப்பது வயதிலிருந்து 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தொழில், வேலை வியாபாரம் போன்றவற்றில் தொல்லைகளும் தொழில் வியாபாரம் போன்றவற்றில் திடீரென நஷ்டங்களும், அவமானங்களும் ,ஏமாற்றங்களும் இருந்திருக்கும்..

சிலருக்கு ஏழரைச் சனியால் குழந்தை பாக்கியம் தடைபட்டு இந்த சமுதாயத்தில் ஏளனப் பேச்சுக்கு ஆளாகி இருப்பார்கள்..
அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாத நிலையில் வேதனை பட்டிருப்பார்கள்.
சிலருக்கோ சம்பாதித்த பணம் எல்லாம் வட்டி கட்டுவதற்கும் கடனை அடைப்பதற்கும் ,ஆஸ்பத்திரி செலவுக்குமே சரியாக இருந்தது.. ஒரு பத்து பைசா கூட சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் பலருக்கும் இருந்தது.

இதெல்லாம் கடந்த காலங்கள்..
எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது??
பொதுவாக சனி 3 , 6 , பதினொன்றாம் பாவகத்தில் நன்மைகளை மட்டும் செய்வார் என்பது பொது விதி.

தற்போது உங்கள் ராசிக்கு சனி மூன்றாம் இடமான சகாயத்துக்கு வருகிறார் அதனால் உங்களுக்கு சனி பல சகாயங்களை எல்லாம் தர இருக்கிறார் மூன்றாவது மனிதனுடைய உதவி சப்போர்ட் கிடைக்கும் …எடுத்த காரியம் வெற்றியாகும்.. செலவுகள் குறைந்து, வரவுகள் அதிகமாகி, உபரி பணம் மிச்சமாகி, சேமிப்பு உயரும்..

உங்கள் தன்னம்பிக்கை உயரும் … சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அந்தஸ்து ,கௌரவம் ,அனைத்தும் உயரும்.. மூன்றாமிடத்தில் சனிக்கு ஸ்தான பலம் கிடைத்துவிடுகிறது ..சனி பலம் உங்களுக்கு இருக்கிறது.. குரு பலம் உங்களுக்கு இருக்கிறது ..குரு பகவான் இரண்டாம் இடத்திலிருந்து உங்களுக்கு தாராளமான தன வரவுகள், பொருளாதார மேன்மைகளையும் அளிக்கிறார்.

குரு பகவான் இரண்டாம் இடத்திலிருந்து எட்டாம் இடத்தை பார்க்கிறார்… அதனால் ஆயுள் பலம் கூடுகிறது… குரு பகவான் ஆறாம் இடத்தைப் பார்ப்பதாலும், சனிபகவான் மூன்றில் உபஜெய ஸ்தானத்தில் இருப்பதாலும் ,உங்களுக்கு தாராளமாக பேங்கில் இருந்து லோன் கிடைத்து, அதன் மூலமாக தொழில் வளம் சிறக்கும் .வியாபாரம் வளர்ச்சி அடையும். குரு பகவான் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்துவிடும். வேலையில் இருப்பவர்களுக்கு உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, விரும்பிய இடங்களுக்கு இடமாற்றம், மேலதிகாரி சப்போர்ட் கிடைத்து விடும்.. அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் தவிர்த்து இதர இனங்களில் நல்ல வருமானம் போன்ற நல்ல பலன்களை இந்த விருச்சிக ராசிக்காரர்கள் இந்த சனிப் பெயர்ச்சியில் எதிர்பார்க்கலாம்.

குரு பகவான் இரண்டாம் இடத்தில் மூலத்திரிகோண பலம் பெற்று மிக அற்புதமாக சஞ்சாரம் செய்வதால், திருமணமாகாத, இதுவரை பிடிக்கு பிடி நழுவி கொண்டிருந்த, இதோ முடிஞ்சிருச்சு அப்படின்னு சொல்லுவாங்க. ஆனால் முடியாமல் நிற்கும் .அப்படிப்பட்ட ஏழரைச் சனியின் காரணமாக தாமதமாகிக் கொண்டிருந்த திருமணம் இருபாலருக்கும் இனிதே வெகு விமர்ரிசையாக, ஆடம்பரத்துடன் பிறர் போற்றத்தக்க வகையில் இனிதே நடந்தேறும்..

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும் .மாணவர்கள் நன்கு படித்து தேர்ச்சி பெறுவர் .விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் அமோகமாக கிடைக்கும். அரசியல்வாதிகள் வெற்றி மேல் வெற்றிகளை குவிப்பார்கள். மக்களிடம் நன்மதிப்பை பெறுவார்கள்…. மக்களிடம் நல்ல பெயர் அவர்களுக்கு இருக்கும்.வருஷாதி நூல் என்ன சொல்லுது அப்படின்னா

“ஆறு ,பன்னொன்பான், மூன்றில்
அந்தகன் நிற்குமாயின் ;
கூறு பொன் பொருள் மிக உண்டாம்.;
குறைவில்லா செல்வம் உண்டாகும்.;
ஏறு பல்லக்குமுண்டாம்;
இடம் பொருளே வலுவுண்டாம்;
காறுபால் அஷ்டலட்சுமி யோகம் உண்டாகும் தானே;

அந்தகன் அப்படினா சனி….ஆறு, பதினொன்று ,மூன்றில் சனி சஞ்சாரம் செய்யும் காலத்தில் பொன் பொருள் சேர்க்கை எல்லாம் உண்டாகும்..செல்வசேர்க்கை லட்சுமி கடாட்சத்தால் உண்டாகும்…கார், பைக் போன்ற வாகனங்கள் வாங்க கூடிய யோகம் யாருக்கு ?இருக்குது அப்படினா
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இருக்குது.
அந்த காலத்தில பல்லக்கு … இந்த காலத்தில கார். இடம் பொருள் வாங்க கூடிய யோகம்…வீடு கட்டக்கூடிய யோகம் இன்னும் ஒரு மூன்று வருட காலத்திற்கு இந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு உள்ளது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும்.. அஷ்ட லட்சுமி யோகம் சனியின் மூன்றாம் இடத்து ஆட்சி பெற்ற அமைப்பில் இருப்பதால் கிடைக்கிறது.

குருவும் தன் பங்கிற்கு நல்ல பலன்களை வாரி வழங்கி வருகின்றனர்.. ராகு கேதுக்களும் குருவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள்.. என்ன வேணுமுனாலும் செய்யலாம். புதிய தொழில் முயற்சிகள் செய்யலாம். வியாபாரம் ஆரம்பிக்கலாம் புதிய கிளைகளை அமைக்கலாம்… வியாபாரத்தை விரிவுபடுத்தலாம் …என்ன செஞ்சாலும் ஜெயிக்கும்… நேரம் நல்லா இருக்குறப்ப என்ன செஞ்சாலும் ஜெயிக்கும் …எடுத்த காரியம் வெற்றியாகும்… தொட்டது துலங்கும்.

பொதுவாக மூன்றாமிடத்தில் லக்ன யோகாதிபதிகளின் சாரம் இருப்பதால் விருச்சிக ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் உடைய சாரம் ,மற்றும் தர்மகர்மாதிபதி களான சூரிய ,சந்திரர்களின் சாரங்கள் இருப்பது யோக பலன்களை கூட்டுவதாகவே அமையும்..உங்கள் வாழ்க்கையில் இருள் விலகி ஒளி பிறக்கப் போகிறது. ஆழ்கடலில் புயல் காற்றில் கரை காணாமல் சிக்கி தத்தளித்தவர்களுக்கு தவித்தவர்களுக்கு கலங்கரை விளக்கம் போல இந்த சனிப்பெயர்ச்சி வர இருக்கிறது. விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது, நல்ல காலம் பிறக்கப் போவது என்று சொல்லி பரிகாரங்கள் எதுவும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு தேவையில்லைன்னு சொல்லி, உங்களிடமிருந்து விடை பெற்றுக் கொள்வது உங்கள்.

Blog at WordPress.com.

%d bloggers like this: