இந்த நாள் வரை சில மாதங்களாகவே உங்களுக்கு நல்ல வேலை அமைப்பு இல்லை, வேலையில் இருந்தாலும் கூடவே இருக்கும் நபரால் தொல்லை, பிடிக்காத இடத்தில் வேலை, வேலையாட்கள் ஒத்துழைக்க வில்லை, உங்களுக்கே தன்னம்பிக்கை குறைவு இருந்து வந்தது, தூக்கம் சரிவர இல்லை.
தேவையற்ற கடன், வீண் பழி,மேலதிகாரிகள் தொல்லை, அதிர்ஷ்ட குறைவு, சில பேருக்கு சம்பந்தமில்லாத தகராறு என்று தான் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கும்,,,,
இனி அந்த நிலமை மாறும் நிச்சயமாக…
உங்கள் ராசி அதிபதி சுக்ரனுடன் பரிவர்த்தனை ஆகி ராசியை பார்ப்பது மேம்பட்ட நிலையை தரும்,,,
உங்களுக்கு சுற்றி வளைத்து பேசுவது ஒத்து வராது, அதேபோல் எல்லோரும் அப்படி இப்படி,
ஆகா ஒகோ என சொல்றீங்க ஆனால் ஒன்றும் நடந்த பாடு இல்லையே, ஜோதிடமே பொய் என குறை சொல்வோரும் உண்டு உங்கள் ராசியில் பல பேர்.
எதையும் துனிந்து பணியாற்ற முடியும்.
வேலை பிரச்சினை தீருகிறது.
புதிய வேலை கிடைக்கும்.
தொல்லை தந்தவர்கள் இனி தரமாட்டார்கள்.
கடனை அடைக்க ஆரம்பித்து விடுவீர்கள்.
தேவையற்ற கடன் வாங்க மாட்டீர்கள்.
எதிரி யார் என தெரியவரும்.
திருமண பேச்சு வரும்.
நன்பர் உதவுவார்கள்.
பணம் கையில் தங்கும்.
குழப்பம் தெளிவாகும், சுய நம்பிக்கை அதிகமாகும்.
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும்.
ஒரே ஒரு குறை
யோசிக்காமல் செய்யும் காரியத்தில் பின்னடைவு உண்டு.