இந்த ராசிக்கு மட்டும் சுக்ரன் பரம நீசத்தை தவிர வேறு எங்கு இருந்தாலும் கெடுப்பது இல்லை. மேலும் செவ்வாய் லாபத்தை தரும் அமைப்பில் உள்ளார்.
இதனுடன் சூரியன் நீச நிலை நீங்கி வலிமையான நிலையில் செவ்வாய் சுக்ர பரிவர்த்தனையுடன் நல்லது சேர்த்து தான் தருவார் நிச்சயமாக.
அரசு வேலைவாய்ப்பு இழுபறியாக இருக்காது, கிடைக்கும்.
தந்தையால் லாப நிலை கிடைக்கும் தந்தைக்கும் மண திருப்தி வரும்.
தந்தை வழி உறவுகள் உதவுவார்கள்
அரசியல்வாதி, அரசு உயர் அதிகாரிகளுக்கு நல்ல ஏற்றமான காலம் தான் நான் மேலே சொன்ன காலகட்டம்.
கலை துறை, யூனிபார்ம் வேலை உள்ளவர்கள், அதிகாரம் செய்யும் பதவியில் உள்ளவர்கள் தோல்வி இன்றி வெற்றியை எதிர்பார்க்கலாம்.
புதிய தொழில் தொடங்கலாம் அதை தொடங்க இந்த காலகட்டத்தில்.
பூமிபூஜை செய்வீர்கள்.
கடைக்கு அட்வான் னஸ் தந்து சிறிய முதலீட்டில் திறக்க ஏற்ற காலம்.
வீடு வாங்குவது, பழைய வீட்டை புதுப்பிப்பது, பைக், கார் வாங்கி கொள்ள நேரிடும்.
விவசாயம் இந்த காலகட்டத்தில் கை கொடுக்கும்.
படிப்பு மந்த நிலை இருந்தாலும் பாதிப்பு இருக்காது.
சினிமா கலைஞர்களுக்கு அதில் நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
ஏற்கனவே வேலையில் உள்ளவர் சில அதிரடி முடிவு எடுத்து லாபத்தை உடனே அடைய முடியும்.
கையில் காசு இருக்கோ இல்லையோ ஜீவனம் நஷ்டம் வராது.
குறிப்பிட்ட பலனாக அதிகார வர்க்கம் மூலம் உங்களுக்கு நன்மை கிடைக்கும், எதிர்ப்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.
வேலை மாற்றலாகி புதிய வேலையும் கிடைக்கும்.
ஒரே ஒரு குறை,
7 1/2 நடப்பதால் நல்லதுகெட்டது எது என தெரியாமல் சந்தேகமாகி விடுவீர்கள்.