வீடு, வேலை தொழில், அரசு சம்பந்தப்பட்டது இவற்றில் பாக்கியம் கிடைக்கும்.
இந்த ராசிக்கு சுக்ரன் + செவ்வாய் பரிவர்த்தனை மூலம் தர்மகர்மாதிபதி யோகத்தை தரும் அமைப்பில் உள்ளார்.
இதனுடன் சூரியன் நீச நிலை நீங்கி வலிமையான நிலையில செவ்வாய்_சுக்ர பரிவர்த்தனையுடன் நல்லது சேர்த்து தான் தருவார் நிச்சயமாக (அரசாங்கத்தின் மூலம்).
அரசு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அரசியல்வாதி, அரசு உயர் அதிகாரிகளுக்கு நல்ல ஏற்றமான காலம் தான் நான் மேலே சொன்ன காலகட்டம்.
ஏழரை அடுத்த ஆண்டு ஆரம்பித்தாலும், செலவு செய்ய தற்போது பண வருவாய் இந்த காலகட்டத்தில் கிடைக்கும்.
வீடு வாங்குவது, பழைய வீட்டை புதுப்பிப்பது, பைக், கார் கிடைக்கும்.
விவசாயம் இந்த காலகட்டத்தில் கை கொடுக்கும்.
படிப்பு மந்த நிலை இருந்தாலும் பாதிப்பு இருக்காது.
சினிமா கலைஞர்களுக்கு அதில் நல்ல வாய்ப்பு உண்டு.
வாழ்க்கை துணைக்கு வேலை கிடைக்கும், திருமணம் நடக்கும், ஆடம்பர பொருள் வாங்கும் என்னம் இப்போது பலிக்கும்.
ஒட்டல் தொழில் உள்ளவர்கள் இப்போது நல்ல நிலை அடையும் காலம்.
பண வருவாய் நல்ல முறையில் வரும் என்பதால், சில காலத்திற்கு ஜோதிடத்தை நம்ப மாட்டீர்கள்.
சுய தொழில் பலரும் ஆரம்பித்து விட்டீர்கள், அப்படி இல்லை என்றால் ஆரம்பித்து விடுவீர்கள் இந்த காலகட்டத்தில்.
குறிப்பிட்ட பலனாக பலருக்கும் திருப்புமுனையாக அமையும் இந்த கிரக மாற்ற காலங்கள் மேலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும், எதிர்ப்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.
வேலை மாற்றலாகி புதிய வேலையும் கிடைக்கும், சகோதர, சகோதரிக்கு நல்லது நடக்கும் உங்களால், அவர்கள் மூலமாகவும் உண்டு, தந்தை உதவி கிடைக்கும்.
கடன் வாங்கும் நிலை பெரிதாக இல்லை.
பெரிய குறை சொல்லும் அளவிற்கு கிரக அமைப்புகள் இல்லை, எதிலும் பெரிய அகலகால் மட்டும் வேண்டாம்.