ரிஷபம் : துனை கருத்து வேறுபாடு நீங்கும் , வாழ்க்கை துனைக்கு நீங்கள் நல்லது செய்ய இயலும், சிலர் துனையை விட்டு விலகி (நன்மை நடக்க) செல்வீர்கள், புதிய யுக்தி,நன்பர்கள் அறிமுகம் இப்போது கிடைக்கும், அரசாங்க நன்பர்கள் உதவுவார்கள், இடமாற்றம் நடக்கும்.
மிதுனம் : கடனும் இருக்கும் அதனை தீர்க்கும் வழியும் பிறக்கும், யாரிடமும் நெருங்கி பழக வேண்டாம், நல்லது என நினைத்தால் வில்லங்கம் உங்களுக்கே திரும்பும் காலம் இது, போட்டியில் வெற்றி உண்டு, சகோதர கருத்து வேறுபாடுகள் வரும், தூர இடத்தில் லாபம், நல்ல செய்தியும் கிடைக்கும்.
கன்னி : பணத்திற்காக, குடும்பத்திற்காக எடுக்கும் முயற்சி பலிக்கும் தற்போது, தைரியம் ஒரு படி கூடுதலாக காணப்படும், தூர இடம் செல்வது உறுதி, நல்ல பெயரை காப்பாற்ற வேண்டிய நிலையில் உள்ளீர்கள், வேலையில் பலருக்கு மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
துலாம் : வாழ்க்கை துணை, நன்பர்கள், குடும்பம்,பணம் இவைகளுக்கு கடுமையாக உழைக்கும் நேரம்,,,,,தூர இடம் செல்வது நடக்கும் ஆனால் எதற்காக செல்றீங்களோ அதற்கு விசாரிக்காமல் சென்றால் தலை குனிவு உண்டு,,,,,பேச்சில் அதிகாரம் வரும்,,,,,
விருச்சிகம் : இதற்கு மேல் குறை சொல்வதற்கு இல்லை,,,,புதிய முடிவு பலரும் எடுத்து விட்டீர்கள், பலரும் சுய புத்திக்கு யோசித்து வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டீர்கள், இடம் நகர்வதால் நன்மை இனி கிடைக்கும், தடை செய்ய யாராலும் இயலாது.
தனுசு : உள்நாடு,வெளி நாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும், ஆரோக்கியம் குறை நீடிக்கிறது, பெண்கள் மூலம் நன்மை உண்டு, இரண்டாம் திருமணம் நடக்கும், முதல் திருமண பேச்சு தொடங்கும், வேலைக்கு விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு ஆர்டர் கிடைக்கும்.