செவ்வாய் பெயர்ச்சி 2020 தனுசு மகரம் கும்பம் மீனம் ராசி

செவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2020 தனுசு ராசி March 22 முதல் May 4)

ராசிக்கு பூர்வ புன்னியாதிபதி மற்றும் விரையாதிபதி உச்சம் என்று நிலை இருந்தாலும் விரையம் என்ற ஒன்று இல்லாமல் அதிர்ஷ்டம் என்ற நிலையே தருவார் #செவ்வாய், ஏன் ? அவரின் பார்வையில் பூர்வ புன்னிய ஸ்தானம் இருக்க போவதே காரணம்.

குழந்தை பாக்கியம் இல்லாதவருக்கு முதலில் தர ஆரம்பிப்பார், அது ஆண் வாரிசாக தான் maximum இருக்கும், உங்கள் சிந்தனை குழப்பம் இண்றியும் மற்றும் தன்நம்பிக்கை தருவதாக அமைந்து எதையும் துடிப்புடன் செயல் பட நேரிடும், இது #ஜென்ம சனி விலகிய நிலையில் இது போல அமைவது மிக நல்ல அமைப்பு.

ஆயுதம் தாங்கிய தெய்வ வழிபாடு செய்வீர்கள், அது குல தெய்வமாகவும் கூட இருக்கலாம், #குரு அதிசாரத்தை பற்றி எல்லாம் கவலை பட தேவை இல்லை, எப்பேற்பட்ட நோயாக இருந்தாலும் வைத்தியம் பிடி படும்.

பொதுவாக சொல்லி விடுகிறேன் என்ன வென்றால் எதில் தடை என்று நினைக்கிறீர்களோ அல்லது தடையாக இருக்கும் விஷயங்களில் எல்லாம் பிரச்சினைகள் மாறி நல்ல நிலை கிடைக்கும், குறிப்பாக சொந்த தொழிலில்.

கடன் பிரச்சினை தீரும், கடன்காரருக்கு சிக்கல் உண்டாகி உங்களுக்கு தர வேண்டிய பணத்தை தரும் செயலில் இறங்குவார், இன்னும் சொல்லப் போனால் கடன் பிரச்சினையில் அதிரடி முயற்சி மேற்கொள்ளும் மாற்றமாக அமையும், பகை விலகுகிறது.

பிள்ளைகள் நன்றாக இருக்க பெறுவார்கள், அவர்களுக்கு தேவையானதை அவர்களே பெற்று கொள்வார்கள், வெளி நாடு,மாநில வேலையை விரும்பியவர்களுக்கு வாய்ப்பு வந்து அங்கே போக முடியும்.

நீண்ட நாள் பிறகு பணம் தங்கும்.

குறையாக, வாய் வார்த்தை தெறிக்கும், குறிப்பாக கெட்ட சொல் பலிக்கும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: