ஏழரை நடப்பதால் தூர இடம் செல்ல தயங்கியவர்களுக்கும் அல்லது அங்கே போவதற்கு வெயிட்டிங்கிள் உள்ளவர்களுக்கும் இது ஏற்றமான காலம் தான்.
குறிப்பாக வேலை என்ற விஷயத்தில் தூர இட நகர்வு நிச்சயம் கிடைக்கும், பலரும் திடிரென சொந்த தொழில் ஆரம்பிக்கும் விஷயத்தில் இறங்கி விடுவீர்கள்.
இதுவரை முயற்சி என்ற ஒன்று செய்தீர்களோ இல்லையோ அல்லது செய்த முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காமலும் கூட போயிருக்கலாம், ஆனால் தற்போது செய்யும் எந்த உடனடி முயற்சிக்கும் பலன் கிடைக்கும், நிச்சயமாக.
உங்களின் குறையே ரொம்ப பொறுமையாக இருந்து கோட்டை விடுவது தான், அதனால் அந்த பொறுமையை தள்ளி வைத்து விட்டு கொஞ்சம் சுறுசுறுப்பாக களத்தில் இறங்குங்கள்.
தொலை தொடர்பு மூலம் உங்களுக்கு நல்லது நடக்கும், ஆரம்பித்தில் குறுகிய தூர பயனத்தில் ஆரம்பித்து பிறகு தூர இட நகர்வு கிடைக்கும்.
உணவு விஷயத்தில் நீண்ட நாள் பிறகு செலவு செய்து நல்ல முறையில் சாப்பிட முடியும், தயக்கம் என்ற ஒன்று மறைத்து #துணிகர செயல் நடக்கும் செய்வீர்கள், செவ்வாய் மூலம் நடக்கும் அனைத்து நன்மையும் #தூர இடத்தில் இருந்து கிடைக்கும், நீங்களும் தூர இட விஷயங்களில் தொடர்பு வைத்து கொள்வீர்கள்.
குறையாக, செலவு என்ற ஒன்று நீங்கள் ரொம்ப யோசிக்கும் விஷயத்தில் திடிரென பணம் செலவாகும், கவனம்.