ஜென்ம சனி நடந்தாலும் #செவ்வாய் மாற்றங்கள் மூலம் நல்ல விஷயங்களை எதிர்பார்க்க முடியும், குறிப்பாக சொத்து விஷயத்தில்.
எந்த தொழில், வேலை செய்தாலும் அதில் லாபம் என்ற ஒன்று கிடைக்கும், சகோதர உறவுகள் தற்போது உதவி செய்வார்கள்.
வீடு, நான்கு சக்கர வாகனம், கட்டிடம், சிகப்பு நிற பொருட்கள், ,மெஷின், சீருடை பணி, அசையா சொத்து, ரியல் எஸ்டேட், வறண்ட பூமி, கல்குவாரி, இது போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கும், அல்லது இந்த மாதிரியான விஷயங்கள் மூலமாகவும் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
மேற்சொன்ன வற்றில் சொந்த தொழிலும் கை கொடுக்கும், குறிப்பாக #நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் கூடுதல் நன்மை கிடைக்கும்.
வேலை என்ற விஷயத்தில் இழுபறி எல்லாம் இருக்காது, வேலை தோடுவோருக்கு எப்படியும் கிடைக்கும்.
உயர் கல்வி, தாய்க்கு நன்மையான விஷயம், கஷ்டத்துக்கு மத்தியில் ஒய்வு என்ற நிலை, செய்யும் செயலுக்கு ஏதேனும் ஒரு விதத்தில் பலன் என்று நாட்கள் இருக்கும்.
குறையாக, செவ்வாய் மூலம் நன்மை நடந்தாலும் முக்கிய முடிவு எடுக்க #திணறுவீர்கள், செவ்வாய் மற்றும் சனியால் ராசி பாதிக்கப்படுவதால் #குழப்பவாதியாக மாறி விடுவீர்கள்.
பரிகாரமாக #தமிழ் கடவுளையும் _ #கால பைரவரையும் பிடியுங்கள்.