ராஜயோகாதிபதி #உச்சம் பெற்று லாப ஸ்தானத்தில் இருக்க போவதால் எந்த விஷயத்திலும் குறை இல்லாமல் பார்த்து கொள்வார், குடும்பத்தால் நன்மை கிடைக்கும்.
எந்த விஷயத்தில் பண இழுபறி இருந்ததோ அது முதலில் தீரும், தொழில், வேலை எது வென்றாலும் பணம் தங்கும், கூட்டு தொழிலில் இருப்பவர்களுக்கு மட்டும் உங்கள் அமைப்பு படி பணம் தாமதமாக தான் கிடைக்கும்.
குடும்பம் அமைய வேண்டும் என்பதால் திருமணம் நடக்க வாய்ப்பு அதிகம் உண்டு, அதற்கு அடுத்த படியாக பணம் இருக்க வேண்டும் என்பதால் #வேலையும் கிடைக்கும்.
தற்போது உங்களுக்கு #கடன் நெருக்கடி தான் கூடுதலாக உள்ளது, அதனை தீர்க்க செவ்வாய் மாற்றம் நிச்சயம் நல்ல காலமாக அமையும்.
தெய்வ வழிபாடு உங்கள் சக்திக்கு மீறி பெரிய அளவில் நடக்கும், குறிப்பாக #முருக வழிபாடு, பல விஷயங்களில் மனம் திருப்தி அடையும் செவ்வாய் மாற்றமாக இருக்கும்.
கட்டிட துறை, இயந்திரம், ரியல் எஸ்டேட், சீருடை பணி, மருத்துவ துறை, வாயால் பிழைக்கும் துறை இது போன்றவற்றில் உங்களது திறமை வெளிக்கொணர பட்டு அதன் மூலம் லாபம் கிடைக்கும்..
குறிப்பாக, April 6ம் தேதி பிறகு கடனை தீர்க்கும் நிகழ்வுகள் நடந்து, அதிர்ஷ்ட நிகழ்வுகள் நடக்கும், அதுவரை வாய் #வார்த்தைகளை யாரிடமும் அதிகபடியாக விட்டு விட வேண்டாம்.