அஷ்டம சனி பிரச்சினை ஒரு பக்கம் தற்போது உங்களுக்கு ஆகாத #செவ்வாய் உச்சம் வேறு இருப்பினும் இந்த முறை செவ்வாய் மூலம் நன்மையான விஷயங்களை பெற முடியும்.
கடன் பிரச்சினை ஒரு புறம் இருந்தாலும் அதனை தீர்க்க வழி கிடைக்கும், பணத்தை பிடித்து வைக்க இயலாது என்பதால் வரும் பணத்தை நுட்பமான செயலில் ஈடுபடுத்தி விடுவீர்கள், ,உங்களுடன் தொடர்பு உள்ள சகோதரரால் நன்மை கிடைக்கும்….அதே சமயம் வாழ்க்கை துணை விஷயத்தில் செலவும் வரும்…
கடன், ஆரோக்கியம், சீருடை பணி, சிகப்பு நிற பொருள், அசையா சொத்து, கட்டிடம், ரசாயன பொருள் இது போன்றவற்றில் தொடர்பு உள்ள நபர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும், மற்றபடி வேறு எந்த வேலை செய்பவர்களுக்கு பணம் வராத நிலை மாறி பணம் வர ஆரம்பிக்கும்
குறையாக, இருக்கும் வேலையை கை விட வேண்டாம், தூர இடம் போக வேண்டாம், போனவர்களுக்கு நெருக்கடி கூடுவதாக தான் அமையும்.