திருமணம் கால தாமதமாக உள்ளவர்களுக்கு இந்த காலகட்டத்தில் எப்படியும் அதிரடியாக அதற்கான ஏற்பாடுகள் நடக்கும், சிலருக்கு திருமணமே நடந்து விடும்
கூட்டு தொழில் ஆரம்பிக்கலாம் மற்றும் கூட்டாளிகளை நம்பி செய்யும் செயல் இது எல்லாம் கை கொடுக்கும் இருந்தாலும் அஷ்டம சனியில் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடங்களை மனதில் கொண்டு அவர்களை கையாள வேண்டும்…..
வியாபாரம் , வெளி நாட்டு அல்லது வெளி மாநில தொடர்பு உள்ள தொழில் செய்பவர்களுக்கு அது சம்பந்தப்பட்ட #ஆர்டர்கள் வரும் ஆதாயமும் வரும், கூடவே அதற்காக செலவு செய்யவும் நேரிடும்.
வாழ்க்கை துணையை சேர்த்து கொண்டோ அல்லது கூட்டாளிகளை சேர்த்து கொண்டோ இந்த காலகட்டத்தில் தொழிலை ஆரம்பித்து விடுவீர்கள் அல்லது விரிவுபடுத்துவீர்கள்..
வாழ்க்கை துணை மூலம் உள்ள பிரச்சினையில் முடிவு தெரியும், உங்களது நல்ல பெயருக்கு கலங்கம் வரும் என்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை, #முருகன் பக்தி வரும்
குறையாக , மெஷின், சீருடை பணியாளர், சிகப்பு நிற பொருட்கள், மருத்துவ பொருட்கள், இவற்றில் உங்களுக்கு செலவு வரும் என்பதால் எச்சரிக்கை அவசியம்