நீங்கள் அசால்ட்டாக இருக்காமல் துரிதமாக செயல்படும் விஷயங்கள் மூலம் #கடன் என்ற தலைவலியை மற்ற வம்பு, பிரச்சினைகளை எதிர் கொண்டாலும் தீர்க்க முடியும், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அதில் சிறு பகுதியை தர முடியும்.
உங்கள் ஆரோக்கிய பிரச்சினைகளை சரி செய்ய முடியும், அதே சமயம் தந்தைக்கு ஆகாத செயல் நடக்கும், அதற்கு அவரே அவசரப்பட்டு எதையாவது செய்து கெடுத்து கொள்வார்.
கல்வி நிலை பிரச்சினை இல்லை, தாயார் பிடிவாத நிலை மேலோங்கும், சம்பள வேலைக்கு போகின்றவர்கள் பார்க்கும் வேலையில் நெருக்கடி வரும் என்பதால் மேலதிகாரிகள் பேச்சு கேட்பது நலம்.
வீடு, கட்டிடம், காலி மனை, வாகனங்கள் இது போன்றவைகள் விற்பனை செய்து அதன் மூலம் வரும் பணத்தை கொண்டு கடனை கட்டுவதாக கூட அமையும்.
சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலுக்கு கூடுதல் தொகை முதலீடு செய்வீர்கள், அதே சமயம் வேலை தேடுபவர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி மூலம் வேலை கிடைக்காது.
சுய ஜாதகம் எப்படி இருந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் நாளாக இருக்கும், வளர்ந்த பிள்ளைகள் கையில் காசு தங்குவது பெரும்பாடாக இருக்கும், நீண்ட நாள் பிறகு உங்கள் அதிரடி போக்கால் மனம் திருப்தி அடையும்,
குறையாக, வாழ்க்கை துணை விஷயத்தில் செலவு மட்டும் சரியான நிலையாக அமையாது.