சார்வரி தமிழ் புத்தாண்டு வருட பலன்கள் 2020 – 2021
சூரியன் உச்சமாகும் நிலையில் இந்த #சித்திரை மாதம் 12 ராசிக்கும் எந்த மாதிரியான நல்ல அமைப்பை தருவார் #சூரிய_பகவான்.
மக்களே இந்த பலன் நீங்கள் தற்போது இருக்கும் நிலையில் தான் அமையும் (#காரணம் #ஊரடங்கு #நிலைமை).
மேஷம் ராசி
தன்நம்பிக்கை அதிகம் காணப்படும், வீட்டிற்குள்ளே அல்லது மனதிற்குள்ளே தெய்வ வழிபாடு அதிகம் செய்வீர்கள், அரசு வழியில் திடிர் நன்மை உங்களுக்கு கிடைக்கும்……
ரிஷபம் ராசி
இருக்கும் சூழ்நிலையை உங்களுக்கு ஏற்ப மாற்றுவீர்கள், உங்கள் உடல் நல #சுக அமைப்பிற்கு செலவு கூடுதலாக செய்வீர்கள், அசையா சொத்து மற்றும் அரசு வழியில் உங்கள் நிலைக்கு ஏற்ப முதலீடு செய்வீர்கள் அல்லது இதில் நஷ்டம் வரும், தாய்க்கு செலவு உங்கள் மூலியமாக நடக்கும்…..
மிதுனம் ராசி
உங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும், கடந்த கால தடை பட்ட இழுபறியான எந்த செயலும் தற்போது உங்களுக்கு எதிர்பாராத நன்மையில் முடியும் (இதை உணர Apr25 தேதி ஆகும் )….
கடகம் ராசி
நிதி நிலை கூடுதலாக தான் இருக்கும், சொல்லும் செயலும் பலிக்கும், குடும்ப பிரச்சினை சமரசம் ஆகும், தடுமாறிய வாழ்வாதாரம் தற்போது நல்ல படியாக அமையும்……
சிம்மம் ராசி
எதிலும் அதிகார தோரணை வெளிபடும், உங்களை மற்றவர்கள் எதிர்ப்பது இயலாத காரியம், உங்களின் சுய குணம் வெளிபடும் நாட்கள் இது, கடன் பிரச்சினையை ஒரு கை பார்த்து விடுவீர்கள்…….
கன்னி ராசி
செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும், தூர இட சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்லது நடக்கும், அரசு அல்லது தந்தை வழியில் திடிர் நஷ்டம் வரும் கவனம் (குறிப்பாக #சொத்து விஷயத்தில்)…..
துலாம் ராசி
உங்களுக்கு உங்களை தவிர மற்ற மனிதர்கள் மூலம் லாப விஷயங்கள் நடக்கும், இரண்டாம் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயம் தற்போது கை கொடுக்கும், சொத்துக்களை பெருக்கும் திட்டங்கள் தற்போது நடை பெறும், கூட்டாளிகள் மூலம் நன்மை உண்டு…..
விருச்சிகம் ராசி
மாமியார், தந்தையுடன் மற்றும் அவர் வழி உறவுகள் மூலம் பகை அதிகமாகும், வேலை விஷயத்தில் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை அமையும், நெஞ்சு வலி இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்…..
தனுசு ராசி
நல்ல பெயர் எடுக்கும் காலம், ஏதேனும் ஒரு புதிய விஷயத்தை தற்போது நிறுவுவீர்கள், அது வரபோகும் காலத்திற்கு பயன்படும், உறவுகள்,குலதெய்வம்,தந்தை,அரசாங்கம் இதுபோன்றவற்றில் நல்லது நடக்கும், பழியை துடைத்து புன்னியத்தை தேடி கொள்வீர்கள், ஊர் பாராட்டும் நிகழ்வுகள் நடக்கும்…….
மகரம் ராசி
அசால்ட்டாக இருக்க கூடாது_ எதிலும் இழப்புகள் வரும் கவனம், பொதுநல குணம் தற்போது கூடுதலாக வெளிபடும்……
கும்பம் ராசி
வாழ்க்கை துணை பேச்சை கேட்டு அவரை வைத்து செய்யும் முயற்சி பலிக்கும், கூட்டாளிகள் உதவி கிடைக்கும், குறுகிய தூர நன்மை கிடைக்கும், அதிகார முயற்சியில் களம் இறங்குவீர்கள், திருமண பேச்சு நல்ல படியாக முடியும்…….
மீனம் ராசி
குடும்ப ஒற்றுமை உங்கள் பேச்சால் உடைபடும், அதே சமயம் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும், குடும்ப உறுப்பினர்களுக்கு வைத்திய செலவு செய்ய நேரிடும், கடன் பிரச்சினை மேலும் வலுக்கும் (அதற்கு உங்கள் பேச்சும் ஒரு காரணம் )
Comments are closed.