விகாரி தமிழ் வருட புத்தாண்டு பலன்கள் துலா ராசி
இந்த வருடத்தில் நவம்பர் 5ஆம் தேதி வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார் மற்றும் 9 ஆம் இடத்தில் ராகுவும் 3 ஆம் இடத்தில் கேதுவும் சனியும் சஞ்சாரம் செய்கிறார்கள்
வரும் குரு பெயர்ச்சி வரை உங்கள் 6-ஆம் இடம் 8-ஆம் இடம் 10-ஆம் இடம் பார்வையிடுவதால் உங்கள் தொழில்/ வியாபாரம்/ உத்தியோகத்தில் வெற்றி பெறும் காலம். கௌரவப் பதவிகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான அனைத்து வெற்றிகளும் கிடைக்கும். தொழில் / வியாபாரம் விரிவாக்கம் செய்ய சரியான காலகட்டம் அதற்குண்டான வங்கிக்கடன்கள் கிடைக்கும். அனைத்திலும் வெற்றி காணும் காலம். போட்டிகள் மறையும். தன வரவுகள் வந்து கொண்டே இருக்கும்
உடல் நலனில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் அறுவை சிகிச்சை சம்பந்தமான முடிவெடுத்து அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலம். மறைமுக எதிரி தொந்தரவுகள் மறையும். கடன்கள் முழுவதும் தீரும் காலம். கொடுத்த வாக்குகளை காப்பாற்றும் காலம். உங்கள் வாக்குக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் மறையும்
மாணவ மாணவியர்கள் விரும்பிய மேற்படிப்பு பட்டப்படிப்பு அமையும்
நவம்பர் 5-ஆம் தேதி குரு பெயர்ச்சிக்கு பிறகு மிகுந்த சிறப்பான காலம் திருமணத்துக்கு காத்திருந்தவர்களுக்கு திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் விரைவாக நடந்தேறும். கூட்டுத் தொழில் சிறப்பைத்தரும். கணவன் மனைவி பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேரும் காலம். இனிய பயணங்கள் புண்ணிய ஸ்தல பயணங்கள் உண்டாகும் காலம். பாக்கியங்கள் சேரும் நாள் குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். புதிய பொன் நகை ஆடை ஆபரணங்கள் எலக்ட்ரானிக் ஐட்டங்கள் சேரும் காலம். அடிக்கடி சூப்பர் தகவல்கள் சுப தகவல்கள் வந்துகொண்டே இருக்கும்
தொழில் வியாபாரம் உத்தியோகம் செய்பவர்களுக்கு சிறப்பான காலம். லாப வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் பதவி இடமாற்றம் விரும்பிய இடமாற்றம் சம்பள உயர்வு கிடைக்கும்
பெண்களுக்கு கருவுறும் காலம். கர்ப்பப்பை சம்பந்தமான நோய்கள் விலகும். புத்திர பாக்கியம் மருத்துவத்தின் மூலம் அமையும். தத்தெடுக்கவும் உகந்த காலமாக இருக்கும்
மாணவ மாணவியர்களுக்கு மிக மிக உன்னதமான காலம் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் காலம் விரும்பிய கல்வி மேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு அமையும் காலம்
ஜனவரி 24 2020 சனிப்பெயர்ச்சிக்குப் பிறகு உடல் நலத்தில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் எதிரிகள் காணாமல் போவார்கள் கடன்கள் முழுவதுமாக தீரும் காலம். வெற்றிகளில் தடை தாமதங்கள் ஏற்படும்.
தொழில் வியாபாரம் உத்தியோகஸ்தர்களுக்கு தொழில் வழியில் தொந்தரவுகள் ஏற்படும் மேலதிகாரிகளின் மூலம் அறிக்கை பிரச்சனைகள் ஏற்படும் தொழில் விரிவாக்கம் செய்வதில் கவனத்துடன் இருக்க வேண்டும் வேலை மாற்றத்தை தவிர்க்க சிறப்பு புதிய தொழில் விரிவாக்கம் செய்வதைத் தள்ளிப் போடலாம் கௌரவக் குறைச்சல் ஏற்படும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில் பிரச்சனைகள் உண்டாகும்.
சோம்பேறித்தனம் அதிகரிக்கும் உடல் நல பாதிப்புகள் கூடும் தலைவலி முடி கொட்டுதல் சூடு சம்பந்தமான நோய்கள் உண்டாகும் காலம்
எல்லா விஷயத்திலும் பொறுமையுடன் முடிவெடுக்க வேண்டிய காலம் வேலையில் மிகுந்த அக்கறையுடன் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும்
பரிகாரம்
சனிக்கிழமைகளில் நவகிரகத்தில் உள்ள சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்ற சிறப்பு
தினந்தோறும் விநாயகர் வழிபாடு அவசியம்
வியாழக்கிழமையில் குரு பகவான் வழிபாடு செய்ய சிறப்பு
ஒருமுறை திருச்செந்தூர் சென்று முருகனுக்கு பால் அபிஷேகம் செய்துவர சிறப்பு
மேலே சொன்ன பலன்கள் அனைத்தும் பொதுபலன்களே உங்கள் ஜனன ஜாதகம் மற்றும் நடக்கும் தசாபுத்திகளில் பொறுத்து பலன்களில் மாறுதல்கள் உண்டாகும்
எனவே புதிய முடிவுகள் திட்டங்கள் எடுக்கும் முன் உங்கள் ஜனன ஜாதகத்தை ஜோதிடரிடம் அல்லது என்னிடம் காண்பித்து அறிவுரைப்படி நடந்து கொள்வது சிறப்பு
❇️❇️மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செய்யவும்❇️❇️
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்