விளம்பி வருட பலன் தனுசு ராசி
தனுசு ராசி (65%)
============
இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சாதகமாக இருக்கார். வருடம் முழுவதும் சனி பகவான் சாதகமான நிலையில் இல்லை எனவே கவனமுடன் இருக்க வேண்டும்
💑 திருமணம் நடந்தேறும் காலம். காதல் வெற்றி பெறும், காதல் திருமணம் கைகூடி வரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் காலம். திருமண காலம் கடந்தவர்களுக்கு திருமண வாய்ப்புகள் உண்டாகும். குலந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவம் மூலம் பாக்கியம் கிட்டும். தேவையற்ற பிரச்சினைகள், மனக்குழப்பங்களை தவிர்த்து விடவும்
🏠 புதிய மனை,வீடு அமையும் காலம். புதிய சொத்துகள் சேர்க்கை உண்டாகும். புது வீடு கட்டி கிரக பிரவேசம் செய்து விடுவீர்கள்
🛵🚗 புதிய வண்டி வாகன யோகம் ஏற்படும்
📖நல்ல மதிப்பெண்கள் கிட்டும், விரும்பிய துறையில் மேல்படிப்பு அமையும், வெற்றிகள்/சான்றிதழ்/பாராட்டுகள் கிடைக்கும்
⚖வியாபாரம்/தொழிலில் லாபம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சம்பள /பதவி உயர்வுகள் தேடி வரும் ஆனால் வேலைப்பளு கடினமாகும். அதிக நேரம் உழைக்க வேண்டிய காலம். பாக்கிகள் வசூல் ஆகும் காலம். புதிய தொழில் தொடங்க திட்டம் தீட்டுவீர்கள் அது வெற்றியும் பெறும்
🕉 உல்லாச பயணங்கள் நிறைந்த காலம், செலவுகள் அதிகரிக்கும்
🔘புரட்டாசிக்கு பிறகு பணவரவுகள் தாமதம் ஆகும். பாக்கிகள் வசூல் ஆகாது. டென்சன் அதிகம் ஏற்படும்.எந்த காரியத்தை தொடங்கினாலும் ஒன்றுக்கு இரண்டு முறை முயற்சித்த பிறகே வெற்றி பெறும். இளைய சகோதர சகோதரரிகளுக்கு திருமணம் கூடிவரும் திருமண செலவுகளும் உண்டாகும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். புதிய பொருள்கள் வாங்கி குவிப்பீர்கள். தாய்க்கு இருந்த உடல் நல தொந்தரவுகள் மருத்துவம் மூலம் நீங்கும். பதவி உயர்வு காராணமாக வேலை இடமாற்றம் உண்டாகும் சம்பள உயர்வும் கிட்டும்
பரிகாரம்
=======
இவ்வருடம் முழுவதும் மாதமொருமுறை (ஜன்ம நாளில்) குலதெய்வ வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்
குரு பகவான், சனி பகவானுக்கு விளக்கிட்டு தர்சனம் செய்ய வேண்டும்
திருச்செந்தூர் முருகன் தர்சனம் மற்றும் பாலாபிஷேகம்
மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்
97901 26877
87787 97194