விளம்பி வருட பலன் கன்னி ராசி
கன்னி ராசி (65%)
============
இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சாதகமாகவும்
வருடம் முழுவதும் சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக சாதகமற்ற னிலையில் பலன்களை தர உள்ளார்கள் எனவே நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும்
💑 திருமணம் விரைவில் கைகூடி வரும். குடும்பத்தில் சுமூக உறவுகள் உண்டாகும், பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர வாய்ப்புகள் உண்டாகும், காதல் வெற்றி பெறும். முதிர் கன்னிகளுக்கு திருமணம் நடந்தேறும், உடல் நிலைகள் ஆரோக்கியம் ஏற்படும். அறுவை சிகிச்சை வெற்றி பெறும். உறவினர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும்
🏠 நிலம்,மனை,வீடு வாங்கும் யோகம் உண்டாகும். புது வீட்டில் கிரக பிரவேசம் செய்யும் காலம். தாயின் மூலம் சொத்துகள் வந்து சேரும். பூர்வீகத்தில் இருந்த நிலப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வெற்றியும் கிட்டும். நகை ஆபரணங்கள் வாங்கி அணியும் காலம்
🛵🚗பழைய வண்டி வாகனம் மாற்றி புதிய வண்டிகள் வாங்கும் காலம், வாகன கடன்கள் கிடைக்கும்
📖 மாணவ மாணவிகள் கல்வியில் தேர்ச்சி பெற்று விளக்கும் காலம், விரும்பிய பட்டப்படிப்புகள் அமையும், படிப்பில் இருந்த கவன குறைவுகள் மறைந்து போகும். சுமூகமான படிப்புகள் வெளிநாட்டில் அமையும், கல்விக்கடன் உடனடியாக கிட்டும்
⚖வியாபாரம்/தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும். கடன் பாக்கிகள் முற்றிலும் வசூல் ஆகும், தாரள பணப்புழக்கம் உண்டாகும் காலம். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பதவி/சம்பள உயர்வு ஏற்படும். பெரிய மனிதர்கள் நட்பு கிட்டும். எதிர்பாராத பணவரவுகள் ஏற்படும்
🕉 மலை,குகைக் கோவில்கள் தரிசன வாய்ப்புகள் உண்டாகும்
🔘புரட்டாசிக்கு பிறகு மேற்கண்ட நிலைகள் மாறும் வியாபாரம்/தொழில்/வேலையில் சிக்கல் வரும். பணப்புழக்கம் குறையும். பெரிய திட்டங்களை கவனமுடன் கையாள வேண்டும் இல்லையெனில் நஷ்டங்களை சந்திப்பீர்கள். வேலை/தொழில்/வியாபார மாற்றம் செய்வதை தவிர்க்கலாம். கொடுத்த பணம் சரிவர திரும்பி வராது. குடும்பத்தில் அடிக்கடி வாக்குவாதம் நடக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டி வரும். கொடுக்கல் வாங்கலில் கவனம். வேலையில் விரும்பதகாத இடமாற்றம் உண்டாகும். எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும்
பரிகாரம்
=======
சனி பகவானுக்கு விளக்கிட்டு வழிபாடு செய்யவும்
வீட்டில் நவக்கிரக ஹோமம் செய்து கொள்ள சிறப்பு
ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம்,வஸ்திர தானம் செய்ய மிகுந்த சிறப்பு
மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்
97901 26877
87787 97194