vilambi Tamil New Year 2018 - 2019 Kumbha Rasi Predictions by Jothidarathana Chandrasekaran "ஜோதிடரத்னா சந்திரசேகரன் அவர்கள் கணித்த விளம்பி தமிழ்ப் புத்தாண்டு கும்ப பலன்கள்

விளம்பி வருட பலன் கும்ப ராசி

கும்ப ராசி (80%)
============

இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் மிகுந்த சாதகமாக இருக்கிறார். வருடம் முழுவதும் சனி பகவான் லாப சனியாக சாதகமான நிலையில் இருக்கிறார் எனவே புரட்டாசி வரை மிகுந்த பொற்காலம்

💑 திருமணம் நடந்தேறும். காதல் வெற்றி பெறும். நீண்ட நாள் தடைபட்ட திருமணம் நடக்கும். முதிர் கன்னிகளுக்கு திருமணம் ஆகும் காலகட்டம். நல்ல வரன் அமையும் காலம்

🏠 புதிய மனை/வீடு வாங்கும் யோகம். பூர்வீகத்தில் உள்ள சொத்துகள் உங்களுக்கு சாதகமாக வரும். இதுவரை இருந்து வந்த வீடு நிலம் சம்பந்தமான வழக்குகள் சாதாகமாக தீர்ப்புகள் வரும்
தந்தை வழி சொத்தும் கிடைக்கும் காலம்.

🛵🚗 புதிய வண்டி வாகனம். விரும்பிய வகையில் சொகுது வாகனம் வாங்குவீர்கள்

📖நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். உயர்கல்வியில் சிறந்த மதிப்பெண்கள் கிட்டும். விரும்பிய பட்டப்படிப்புகள் கிடைக்கும். படிப்பில் பாராட்டு சான்றிதழ் கிடைக்கும். படித்து முடித்து வேலைக்கு காத்து கொண்டிருக்கும் மாணவ மாணவிகளுக்கு உடனடியாக கிட்டும். வெளி மாநிலம்/வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிட்டும்

⚖வியாபாரம்/தொழில் லாபகரமாக இருக்கும். எதிர்பாராத லாபம் கிட்டும். விஸ்தரிப்பு வேலைகள் செய்வீர்கள். புதிய வேலை கிடைக்கும். பதவி/சம்பள உயர்வு கிட்டும். விரும்பிய இடமாற்றம் கிட்டும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும்

🕉 வெளிநாடு தெய்வீக பயணம் ஏற்படும்

🔘புரட்டாசிக்கு பிறகு குரு பகவான் சாதகமாக இல்லை எனவே வியாபாரம்/தொழில் மந்தம் ஆகும். தொழில் மாற்றும் சிந்தனை அதிகரிக்கும். வேலை இடமாற்றம்/உயர்வு ஏற்படும். விரும்ப தகாத ஊர் மாற்றம்/இட மாற்றம் உண்டாகும். பதவி/வேலை பறிபோகும். பணமமுடக்கம் ஏற்படும். கடன் வசூலில் தாமதம் உண்டாகும். பாக்கிகள் வசூலாகது. உயர் அதிகாரி தொந்தரவு உண்டாகும். திருமணம்,குழந்தை பாக்கியம் தாமதப்படுத்தும்

பரிகாரம்
=======

குரு பகவான், சனி பகவானுக்கு விளக்கிட்டு தர்சனம் செய்ய வேண்டும்

குருமார்களுக்கு வஸ்திர தானம் செய்ய சிறப்பு

மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்

97901 26877
87787 97194

Blog at WordPress.com.

%d