vilambi Tamil New Year 2018 - 2019 Simma Rasi Predictions by Jothidarathana Chandrasekaran "ஜோதிடரத்னா சந்திரசேகரன் அவர்கள் கணித்த விளம்பி தமிழ்ப் புத்தாண்டு மிதுன சிம்ம பலன்கள்

விளம்பி வருட பலன் சிம்ம ராசி

சிம்ம ராசி (65%)
============

இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான்,
சனி பகவான் சுமாரன பலன்களை தர உள்ளார்கள் எனவே அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் ஆபத்தை தரும் கவனமுடன் முடிவுகள் எடுக்க வேண்டிய காலம்

💑 திருமணம் தள்ளி போகும், வரன் அமைவதில் சிக்கல் ஏற்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும், சந்தான விருத்தி தடைபடும், சுப நிகழ்வுகள் தள்ளி போகும் காலம்

🏠வீடு,மனை வாங்குவதில் இழுபறி நீடிக்கும், வில்லங்க சொத்துகள் அமையும் ஆதலால் அதில் பணம் இழப்பு, நஷ்டம் ஏற்படும்.
கடன் வாங்கி வீடு கட்ட உகந்த காலம்

🛵🚗புது வண்டி வாகனம் வாங்க எற்ற காலக்கட்டம் அல்ல. ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செய்வது நல்லது

📖 படிப்பில்/தேர்வில்/போட்டி தேர்வில் மிகுந்த கடின கவனம் செலுத்த வேண்டிய காலம், மேற்படிப்பு/பட்ட படிப்பு/ உயர்கல்வியில் விரும்பிய படிப்பு அமைவதில் தடை தாமதம் உண்டாகும். பலரின் கன்டிப்புக்கு ஆளாக நேரிடும்

⚖வியாபாரம்/தொழில் துறையில் அதிக முயற்சி எடுத்து வெற்றி பெற வேண்டிய காலகட்டம். புது முயற்சிகள் எடுக்கும் முன் பலமுறை யோசித்து செயல் பட வேண்டும். அகல கால் வைப்பதை தவிர்க்க வேண்டும். பணி புரிவோர் வேலை மாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டிய காலம் இருக்கும் இடத்திலேயே பணியை தொடர்வது சிறப்பு, சம்பள /பதவி உயர்வு கிட்டாது,

🕉புனித ஸ்தல பயணங்கள் நிம்மதியை தரும்

🔘புரட்டாசிக்கு பிறகு மேற்கண்ட நிலைகள் மாறும். திருமணம் கூடி வரும், புதியவர்கள், நண்பர்கள், உறவுகள் ஓத்துழைப்புகள் கிட்டும், வியாபாரம்/தொழில் வளர்ச்சி பெறும், நல்ல முயற்சி செய்து சம்பள/பதவி உயர்வு கிட்டும். நல்ல பெயர் கிட்டும், குழந்தை பாக்கியம் உண்டாகும், மாணவ மாணவிகள் படிப்பில் ஆர்வம் பெருகும், நல்ல மனிதர்கள் தொடர்பு கிட்டும், ஆதாயங்கள் தேடி வரும்

பரிகாரம்
=======

சனிபகவான், ஆஞ்சநேயர்,குரு பகவானுக்கு விளக்கிட்டு வழிபாடு செய்யவும்

ஊனமுற்ற எளியோர்களுக்கு, குரு மார்களுக்கு அன்னதானம்,வஸ்திர தானம் செய்ய மிகுந்த சிறப்பு

மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்

97901 26877
87787 97194

Blog at WordPress.com.

%d