Site icon Tamil Jothidam Tips

Forum

Please or Register to create posts and topics.

பகலில் பலம் பெறும் கிரகங்கள், இரவில் பலம் பெறும் கிரகங்களை எப்படி கண்டறிவது?

Quote from Sri Ramajeyam Muthu on November 30, 2023, 8:43 am

நம்முடைய வாழ்வில் சிலர், இரவில் பணிபுரியக்கூடிய, ஐடி துறைகளில் வேலை செய்கின்றனர்.

தூங்கா நகரமான மதுரையில் வசிக்கும் நான், இரவில் ஒரு மணிக்கு கூட, மதுரையில் பல உணவகங்கள் திறந்து இருப்பதை பார்த்திருக்கிறேன்.

சிம்மக்கல் பழக்கடைகள், மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் போன்றவை, இரவிலும் பகல் போல் தொழிலாளர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள்.

இசையமைப்பாளர்கள், பெரும்பாலும் இரவு நேரத்தில் மட்டுமே, கம்போஸ் செய்து செய்கின்றனர்.

நீண்ட நேரம் கண் விழித்து வாகனம் ஓட்டும், வாகன ஓட்டிகளுக்கும் இரவில் வலுப்பெறும் கிரகங்கள் ஜாதகத்தில் வலுவாக இருக்கும்.

அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
ஷட்பலத்தில் கால பலம் என்று ஒன்று உண்டு.

பகலில் பிறக்கும் குழந்தைகளுக்கு சூரியன், குரு, சுக்கிரன் வலுவாக இருப்பார்கள்
இரவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சந்திரன், செவ்வாய், சனி வலுவாக இருக்கும்.

புதன் பகலிலும், இரவிலும் சரிசமமாக இருக்கும்.
ராகு, இருட்டை குறிக்கும் கிரகம் என்பதால், இரவு முழுதும் பலமாக இருக்கும்.

கேது, அந்திசாயும் நேரத்திலும், அதிகாலைப் பொழுதிலும் பலமாக இருக்கும்.
சுப கிரகங்கள் வளர்பிறை காலத்திலும், பாவகிரகங்கள் தேய்பிறை காலத்திலும் வலுவுடன் இருக்கும். (வளர்பிறைச் சந்திரன் சுபக்கிரகம் ;தேய்பிறை சந்திரன் பாவகிரகம்)
அதுபோல் ராசிகளிலும் பகல், இரவுப் பொழுதில் பலம் பெறும் ராசிகள் உண்டு.

மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம், தனுசு, மகரம் ஆகிய ராசிகள் இரவிலும்,
சிம்மம், கன்னி, துலாம் விருச்சிகம், கும்பம், மீனம் ஆகிய ராசிகள் பகலிலும் பலம் பெறும்.

இரவு 11 மணிக்கு மேல் நம்மையறியாமல் தூங்க ஆரம்பித்து விடுகிறோம்.
சிலருக்கு பதினொரு மணிக்கு மேல் தான் வேலையே ஆரம்பிக்கிறது. (ஐடி நிறுவனம், இரவு நேர வாகன ஓட்டிகள் போன்றோர்)

இரவு கிரகங்களும், இரவு ராசிகளும் பலம் பெறாத, ஜாதகரை காரோட்ட அனுப்பினால், விடியக் காலை மூன்று மணிக்கு, தூங்கி, நேசனல் ஹைவேயில் உள்ள புளிய மரத்தில், சொருக்கென்று சொருகி விடுவார்கள்.

சில பெண்கள், ஆண்களுக்கு நிகராக தைரியமாக காணப்படுவார்.
தோற்றம், தைரியம் போன்றவற்றில் ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவள் இல்லை என்பது போல் கம்பீரமாக இருப்பார்கள்.

உதாரணமாக மேஷ ராசி இரவில் பலம் பெறும் ராசி. செவ்வாயும் இரவில் பலம் பெறும் கிரகம்.

மேஷ லக்னம், மேஷ ராசியில் அப்பெண் இரவில் பிறந்திருந்து லக்னத்தில் செவ்வாய் ஆட்சி பெற்றால், பார்ப்பதற்கு மட்டும் தான் பெண் போல் தோற்றம். ஆனால் நடை, உடை பாவனை எல்லாம் ஆண்களின் சுபாவத்தைக் கொண்டிருக்கும்.

சீண்டிப் பார்த்தால், நோண்டி நொங்கு எடுக்கும், சாதாரண சாந்தியாக இல்லாமல், காக்கி சட்டை போடாத விஜயசாந்தி ஆகவும், சிலர் இருந்து கசக்கி பிழிந்து எடுத்துவிடுவார்கள்.

Post Reply: பகலில் பலம் பெறும் கிரகங்கள், இரவில் பலம் பெறும் கிரகங்களை எப்படி கண்டறிவது?
Exit mobile version