Astrology Prediction – Jothida Palangal ஜாதகபலன்கள்

ஜாதகபலன்கள் பாகம் 1:

ஒரு ஜாதகத்தில் பலாபலன்களை சொல்லவேண்டுமானால்
குறிப்பிட்ட காரக பாவத்தையும் காரக கிரகத்தையும் பார்த்து பலன்கள் சொல்லவேண்டும் ஸ்தானங்கள் சுபருடைய ஸ்தானங்களா பாபருடைய ஸ்தானங்களா , அந்த ஸ்தானாதிபதிகளும் காரக கிரகமாகிய கிரகமும் சுபர் இராசியில் உள்ளதா அல்லது பாபா இராசியில் உள்ளதா பாபரால் பார்க்கப்பட்டிருக்கின்றார்கள சுபருடன் அல்லது பாபர்களுடன் செர்ந்துவுள்ளர்களா என்றுபார்த்து சொல்லவேண்டும்.

1)உடல்பற்றி தெரியவேண்டுமானால் 1ம் ஸ்தானம் 6ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் சூரியபகவான் இவர்கள் நல்ல நிலைகளில் இருந்தால் அதற்க்கு தகுந்தவாறு உடல் பலம் இருக்கும்.

2)கண்களை பற்றி தெரியவேண்டுமானால் 2ம் ஸ்தானம் 12ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் சந்திரபகவான் சூரியபகவான் இவர்களின் சுப பாபா நிலைகள் தெரிந்து சொல்லாம் 2வது ஸ்தானம் சூரியபகவான் வலதுபக்கம் கண், 12வது ஸ்தானம் சந்திரபகவான் இடதுபக்கம் கண்.

3)காதுகள் பற்றி தெரியவேண்டுமானால் 3ம் ஸ்தானம் 11 ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் குருபகவான் செவ்வாய்பகவான் இவர்களின் சுப பாபா நிலைகள் தெரிந்து சொல்லாம் 3வது ஸ்தானம் செவ்வாய்பகவான் வலதுபக்கம் காது ,11 வது ஸ்தானம் குருபகவான் இடதுபக்கம் காது.

4)வித்தைகள் (அல்லது கலைகள்) பற்றி தெரியவேண்டுமானால் 2ம்ஸ்தானம் 4ம் ஸ்தானம் 5ம் ஸ்தானம் 11ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் குருபகவான் புதபகவான் சுப பாபா பலத்தையும் தெரிந்து சொல்லாம்.

5)வாகனம் பற்றி தெரியவேண்டுமானால் 4ம் ஸ்தானம் 11ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் சுக்கிரபகவான் சுப பாபா நிலைகள் தெரிந்து சொல்லாம். சர்ப்பா கிரகம் என்பதால் இராகுபகவானையும் கவனத்தில்கொண்டு பார்க்கவேண்டும்.

6)வீடு பூமி பற்றி தெரியவேண்டுமானால் 2ம் ஸ்தானம் 4ம் ஸ்தானம் 10ம் ஸ்தானம் 11ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் செவ்வாய்பகவானின் சுப பாபா பலம் அறிந்து பூமி பற்றி சொல்லவேண்டும். 4ம் ஸ்தானம் 10ம் ஸ்தானங்களின் பலத்தையும் சுக்கிரபகவானின் சுப பாபா பலம் அறிந்து வீடு பற்றி சொல்லவேண்டும்.

7)தாய் பற்றி தெரியவேண்டுமானால் 2ம் ஸ்தானம் 4ம்ஸ்தானம் 7ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் இரவில் பிறந்தவர்களுக்கு சந்திரபகவானும் பகலில் பிறந்தவர்களுக்கு சுக்கிரபகவானையும் கொண்டு சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும்.. சுக்கிரபகவானும்,

8)மாமன் (மாதுலன் )பற்றி தெரியவேண்டுமானால் 5ம் ஸ்தானம் 6 ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் புதபகவானின் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும்.

9)பங்காளி, சத்துரு பற்றி தெரியவேண்டுமானால் 6ம் ஸ்தானாதிபதி இலக்கினாதிபதியையும் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும் .

ஒரு ஜாதகத்தில் பலாபலன்களை சொல்லவேண்டுமானால் குறிப்பிட்ட காரக பாவத்தையும் காரக கிரகத்தையும் பார்த்து பலன்கள் சொல்லவேண்டும் ஸ்தானங்கள் சுபருடைய ஸ்தானங்களா பாபருடைய ஸ்தானங்களா , அந்த ஸ்தானாதிபதிகளும் காரக கிரகமாகிய கிரகமும் சுபர் இராசியில் உள்ளதா அல்லது பாபா இராசியில் உள்ளதா பாபரால் பார்க்கப்பட்டிருக்கின்றார்கள சுபருடன் அல்லது பாபர்களுடன் செர்ந்துவுள்ளர்களா என்றுபார்த்து சொல்லவேண்டும்.

10)ருணம் நோய்கள் பற்றி தெரியவேண்டுமானால் 3ம் ஸ்தானம் 6ம் ஸ்தானம் 8ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் சனிபகவான் செவ்வாய்பகவானின் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும்.

இவைகள் பலம் பெற்றால் நோய்கள் கிடையாது பலம் குறைந்தால் நோய்கள் உண்டுபண்ணும். சூரியபகவான் தலையிலும், சந்திரபகவான் முகத்திலும்,செவ்வாய்பகவான் கழுத்திலும்,புதன்பகவான் நாபியின் கீழும், குருபகவான்நோயற்ற தன்மையை தருவார், சுக்கிரபகவான் கண்ணையும்,சனிபகவான் இராகுபகவானும் வாதநோயையும் கேதுபகவான் வயிற்று நோயையும் உண்டுபண்ணுவார்கள்.

11)களத்திரம் மனைவி பற்றி தெரியவேண்டுமானால் 2ம் ஸ்தானம் 7ம் ஸ்தானம் 11ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் சுக்கிரபகவானின் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும் இந்த ஸ்தானாதிபதிகள் பலமாகயிருந்தால் ஒரே களத்திரம். பலம் குறைந்துயிருந்தால் பலதாரம் என்றுபார்த்து சொல்லவேண்டும்.

12) பித்ரு தந்தை பற்றி தெரியவேண்டுமானால் 5ம் ஸ்தானம் 9ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் இரவில் பிறந்தவர்களுக்கு சனிபகவானும் பகலில் பிறந்தவர்களுக்கு சூரியபகவானையும் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும்.

13)புத்திரர் மகன் மகள் பற்றி தெரியவேண்டுமானால் 5ம் ஸ்தானம் 7ம் ஸ்தானம் 9ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் குருபகவானின் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும் சுப பலமுடன் இருந்தால் மகன் மகள்கள் இருப்பார்கள் பலத்திற்கு தகுந்தற்போல பலன் இருக்கும்…

14)யாத்திரை பயணம் பற்றி தெரியவேண்டுமானால் 2ம் ஸ்தானம் 5ம் ஸ்தானம் 7ம் ஸ்தானம் 9ம் ஸ்தானம் 10ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் அந்த ஸ்தானத்தில் உள்ள கிரகங்களையும் பார்த்து சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும்.

15)சகோதர் சகோதரி பற்றி தெரியவேண்டுமானால் 3ம் ஸ்தானம் 11ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் செவ்வாய்பகவானின் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும். 3ம்ஸ்தானமும் செவ்வாய்பகவானை கொண்டு இளைய சகோரர் ,சகோதரி பற்றி தெரிந்துகொல்லம். 11ம் ஸ்தானமும் செவ்வாய்பகவானை கொண்டு மூத்த சகோரர் சகோதரி பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் .

16)யோகங்கள் பற்றி தெரியவேண்டுமானால் 2ம் ஸ்தானம் 5ம் ஸ்தானம் 9ம் ஸ்தானம் 11ம் ஸ்தானங்களின் கிரகங்களின் பலத்தையும் சுக்கிரபகவான் குருபகவானின் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும் இந்த கிரகங்கள் ஆட்சி உச்சம் அகிருந்தால் நல்ல பலன்கள் கொடுக்கும். நட்பு தற்கால நடப்புகளை பெற்றிருந்தால் மத்திம பலன்கள் கொடுக்கும். பகை நீசம் அகிருந்தால் அசுபபலன்களே தரும் அந்தந்தகிரகங்களின் தசபுத்திகளில் இந்த யோகங்கள் நடக்கும்.

17)சுகம் பற்றி தெரியவேண்டுமானால் 2ம் ஸ்தானம் 4ம் ஸ்தானம் 7ம் ஸ்தானம் 12ம் ஸ்தானங்களின் கிரகங்களையும் அந்த ஸ்தானத்தில் உள்ள கிரகங்களையும் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும் அந்தந்தகிரகங்களின் பலத்திற்கு தகுந்தாற்போல் சுகம் உண்டு .

18)விரயம் செலவுகள் பற்றி தெரியவேண்டுமானால் 12ம் ஸ்தானம் சனிபகவானின் பலத்தை கொண்டு சொல்லவேண்டும் 12ம் ஸ்தானத்தில் சுபகிரகங்கள் இருந்தாலும் பார்த்தாலும் அல்லது அந்த ஸ்தானத்தையும் சனிபகவானையும் சுபர்கள் பார்த்தாலும் சுப விரையம் அல்லது செலவுகள் ஆகும். பாபரும் கலந்து பார்த்தாலும் செர்ந்துயிருந்தலும் அசுபபலன்களே விரையம் அல்லது செலவுகள் ஆகும்..

19)தொழில் ஜீவனம் 3ம் ஸ்தானம்10ம் ஸ்தானம் 12ம் ஸ்தானங்களின் கிரகங்கள் மற்றும் சூரியபகவான்,சந்திரபகவான், குருபகவானும் நல்ல பலமுடன் இருந்தால் அரசு தொழில்கள் அமையும் அல்லது நல்ல தொழில்கள் அமையும்…4ம் ஸ்தானம் 7ம் ஸ்தானம் 10ம் ஸ்தானம் 11ம் ஸ்தானங்களின் கிரகங்கள் மற்றும் புதபகவான் சனிபகவானும் நல்ல நிலையில் இருந்தால் சுய தொழில்கள் அமையும் .4ம் ஸ்தானம் 7ம் ம் ஸ்தானங்களின் கிரகங்களின் நிலைகள் மற்றும் சனிபகவானின் பலத்தையும் கொண்டு விவசாயத்திற்கு உண்டான தொழிலை பார்ப்பார்கள்….

20)ஆயுள் வயது 1ம் ஸ்தானம் 3 ம் ஸ்தானம் 8ம் ஸ்தானம் 10ம் ஸ்தானங்களின் கிரகங்களின் நிலைகள் மற்றும் சனிபகவானின் சுப பாபா பலம் அறிந்து சொல்லவேண்டும் வயது தோராயமாகவே இருக்கும் ஆயுர்தாய கணிதம்போல் துல்லியமாக தெரிந்துக் கொள்ள முடியாது.

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More