2022 to 2023 ரிஷப ராசி ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்

ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் ரிஷப ராசி 2022 to 2023

ரிஷப ராசி (கார்த்திகை 2,3,4,. ரோகிணி மிருகசீரிடம் 1,2) ராகு கேது பகவான் பெயர்ச்சி பலன்கள்

வாக்கியப் பஞ்சாங்கப்படி ராகு கேது பகவான் பெயர்ச்சி

பிலவ வருஷம் பங்குனி மாதம் 07 ஆம் தேதி (21.03.2022) திங்கட்கிழமை சூர்ய உதயாதி 22.06 நாழிகை அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ராகு கேது பகவான் பெயர்ச்சி

பிலவ வருஷம் பங்குனி மாதம் 29 ஆம் தேதி (12.04.2022) செவ்வாய்க்கிழமை சூர்ய உதயாதி 19.24 நாழிகை பகல் 01:48 அளவில் முறையே ராகு பகவான் ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கும் கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்கள்
ராகு கேது பகவான் பெயர்ச்சி சுமார் ஒன்னரை வருடம் ஒரு ராசியை கடப்பார் அதன் படி Oct 2023 வரை இருப்பார்
உங்கள் ராசிக்கு 12-ஆம் இடம் அயன சயன போகம் ரகசிய முதலீடுகள் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு ராகு பகவான் பெயர்ச்சியாகிறார்
உங்கள் ராசிக்கு கேது பகவான் 6மிடம் மிடத்தில் ருண ரோக சத்ரு ஸ்தானம் அடிமைத்தொழில் என்று சொல்லக்கூடிய இடத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

ராகு பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022

 • ரகசிய முதலீடுகள் அதிகரிக்கும்
 • கடன் தீர்க்கும் முயற்சியில் பலன் கிடைக்கும்
 • ஏதாவது ஒன்றைத் தியாகம் செய்யும் சூழல் ஏற்படும்
 • அந்நிய தேச பயணங்கள் வெளிநாடு பயணங்கள் தூர பயணங்கள் ஏற்படும்
 • ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிய நேரமாக இருக்கும்
 • நிம்மதியான உறக்கம் கெடும்
 • மாற்று மதத்தினர் அல்லது அந்நிய தேசத்தினர் மூலம் ஆதாயங்கள் உண்டு
 • குடும்பத்தை விட்டு பிரியும் சூழல் ஏற்படும்
 • இல்லற வாழ்க்கை கசக்கும்
 • சட்ட ரீதியான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் இல்லையெனில் சிறை தண்டனை துன்பங்களை ஏற்க வேண்டிவரும்
 • திருமண தடைகள் ஏற்படும் புத்திர தோஷம் ஏற்படும்
 • நீண்டநாள் வியாதியால் அவதிப்படுபவர்கள் வயது முதிர்வு உள்ளவர்கள் கடைசி கால போராட்டம் நடைபெறும்
 • செய்யும் வேலைகளில் / பணிகளில் கவனமாக இருக்க வேண்டும் இடமாற்றம் பணி நீக்கம் ஏற்படும்
 • கால்களில் சரும நோய்கள் ஏற்படும்
 • இடது கண் சம்பந்தமான தொந்தரவுகள் உண்டாகும்
 • பெரும் கவலைகள் ஆட்கொள்ளும்
 • இளம் வயதினர் தேவையற்ற பெண்கள் விஷயத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும் தவறு செய்யவும் தூண்டும்
 • ஆராய்ச்சிப் படிப்புகள் தடைபடும்

கேது பகவான் பெயர்ச்சி பலன்கள் 2022

 • கடன் நோய் எதிரிகள் தொந்தரவு கட்டுக்குள் வரும்
 • நீண்ட நாட்களாக ஆறாத புண் பால்வினை நோய்கள் ஒரு முடிவுக்கு வரும் தீரும்
 • வழக்குகளில் வெற்றியும் தோல்வியும் கலந்து வரும்
 • வீட்டில் களவு போக வாய்ப்புண்டு
 • பலவித இடையூறுகள் தடைகளும் ஏற்படும்
 • மனநோய் பாதித்தவர்கள் மருத்துவத்தின் மூலம் சரியாக வாய்ப்பு அமையும்
 • உடலில் கட்டி வீக்கம் போன்ற தொல்லைகள் ஏற்பட்டு மறையும்
 • பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும்
 • எலும்புருக்கி நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு எனவே கால்சியம் சம்பந்தப்பட்ட மருந்துகளை/உணவுகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • அச்சம் பயம் அடிக்கடி தொற்றிக்கொள்ளும்
 • நேரம் தவறி சாப்பிடும் படி ஏற்படும்
 • வயிற்றுப்புண் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்
 • வயிற்று உபாதைகள் அதிகரிக்கும்
 • சிறுநீரக சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் ஏற்படும்
 • பங்காளிப் பகை ஏற்படும்
 • தைரியமாக இருந்தால் நோய்களில் இருந்து விடுபடும் காலம்
 • மற்றவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் எனவே கவனமாக இருக்க வேண்டும்
 • கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது நல்லது

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமை ராகு வேளையில் திருநாகேஸ்வரம் ராகு பகவானையும் , கீழப்பெரும்பள்ளம் கேது பகவானையும் தரிசிக்க சிறப்பு
அல்லது

 • காளஹஸ்தி சென்று காலஹஸ்தி நாதரை வழிபட சிறப்பு.
 • தினந்தோறும் துர்க்கை, விநாயகர் வழிபாடு
 • வயதானவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்ய பல சிறப்புகளை சந்திக்கலாம்

இவைகள் யாவும் பொதுபலன்களே. உங்கள் ஜனன ஜாதகம், தசா புத்தி, கிரக பலம் மற்ற கிரக பெயர்ச்சிகள் கொண்டு பலன்களில் மாற்றம் உண்டாகும்.

Blog at WordPress.com.

%d bloggers like this: