Sani Bahagavan Transit – சனி பகவான் பெயர்ச்சி -2017-20

சனி பகவானின் பெயர்ச்சியும் – பொது பலன்களும் 2017 முதல் 2020 வரை – விளக்கம் =========================================================

திருக்கணிதப்படி :
==================

கடந்த தை மாதம் 13 (26.01.2017) வியாழக்கிழமை இரவு 7:31 க்கு ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து அதிசாரமாக பெயர்ச்சி ஆகி தனுசு ராசிக்கு சென்றார் பின் வக்கிர கதியில் வந்து ஆனி 6 ( 20.06.2017 ) செவ்வாய்கிழமை மீண்டும் விருச்சிக ராசிக்கு வந்தார்

தற்போது மீண்டும் ஐப்பசி 9 (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 3:28 க்கு நேர்கதியில் விருச்சிக ராசியில் முழுவதுமாக பெயர்ச்சியாகி விட்டார்.

வாக்கியப்படி :
=============
வரும் மார்கழி 4 (19.12.2017) செவ்வாய்க்கிழமை 8:52 நாழிகை அளவில் ஸ்ரீ சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார்

இவர் தனுசு ராசியை கடக்கும் காலத்தில் 12 ராசிக்காரர்களும் கீழ்க்கண்ட பலன்களை நல்ல / தீய / சுமார் பலன்களை அடைய வாய்ப்புகள் உள்ளன

அவைகள்

நல்ல பலன்களை அடைய போகும் ராசிகள்

• கும்பம் – யோகச் சனி
• கடகம் – 6 மிட சனி (யோகம் தரும் இடம் )
• துலாம் – சகாய சனி

கெட்ட பலன்களை எதிர்கொள்ள இருக்கும் ராசிகள்

• மகரம் – விரயச் சனி
• மிதுனம் – கண்டச்சனி
• மீனம் – 10 மிட சனி

மிக கெட்ட பலன்களை எதிர்கொள்ள இருக்கும் ராசிகள்

• தனுசு – ஜென்மச்சனி
• ரிஷபம் – அட்டமச்சனி
• கன்னி – அர்த்தஷ்டமாச் சனி

சனி நல்ல நிலையில் இல்லாமல் இருந்தாலும் கடந்த காலத்தில் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளில் இருத்து கொஞ்சம் விடுதலை கிடைக்க போகும் ராசிகள்

• சிம்மம் – மத்திமச் சனி
• மேஷம் – மத்திம சனி
• விருச்சிகம் –  பாத சனி, குடும்பச் சனி, வாக்குச் சனி

ஆகும்

சனிபகவான் ஆனவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து அதே இடத்திற்கு அவர் 12 ராசிகளை கடந்து வந்து சேறுவதற்கு கிட்டதட்ட 30 ஆண்டு காலத்தை எடுத்து கொள்கிறார். அதாவது சாராசரியாக இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியை கடக்க எடுத்து கொள்கிறார்.. மேலும் இந்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு முறை குருபகவானின் பெயர்ச்சியும், ராகு கேது பெயர்ச்சி மற்றும் மற்ற கிரககங்களின் பெயர்ச்சிகள் பலமுறை நடக்கவிருக்கிறது. எனவே நல்ல, தீய பலன்கள் கலந்து தான் எல்லா ராசிக்காரர்களுக்கும் நடக்கவிருக்கிறது. எனவே எதை நினைத்தும் பயம் கொள்ளலாம் தன் கடமைகளை சரி வர செய்து இறைவழிபாட்டில் கவனம் செலுத்திவந்தாலே போதுமானது.

ஒருவருக்கு முதல் முப்பது ஆண்டுகளுக்குள் ஒருமுறை சனிபகவான் தன் ராசியை கடக்க வாய்ப்புள்ளது இப்படி கடக்கும் போது சந்திரன் தன் ராசிக்கு 12 ல் வரும் காலம் ஏழரைச்சனிபகவானின்
முதல் இரண்டரை வருடம் விரையச் சனி துவக்ககாலம்.
அடுத்த இரண்டரை வருடம் ஜென்ம சனி
அதற்கடுத்த இரண்டரை வருடம் பாத,குடும்ப,வாக்கு சனி
என்று அழைக்க படுகிறது.

முதலில் வரும்

முதல் சுற்றில் மங்கு சனி
இரண்டாம் சுற்றில் பொங்கு சனி
மூன்றாம் சுற்றில் கங்கு சனி

என்று அழைக்கிறோம் காரணம்

முதல் சுற்றில் மங்கு சனியாக வரும் போது பெரும்பாலும் கல்வி,திருமணம் அல்லது வேலைவாய்ப்பு இந்த வயதில் கடந்து கொண்டு இருப்போம் அப்பொழுது இந்த சனிபகவான் ஆனவர் நமக்கு பலவிதமான சோதனைகளை தருவார் அதை நாம் சந்திக்க நேரிடும் எனவே பெரும்பாலும் தெரிந்தோ தெரியமலோ ஒருவித பய உணர்வுடன் தான் முதல் சுற்றை கடந்து விடுகிறோம்.

ஆனால் நாம் பொங்கு சனி என்ற இரண்டாம் சுற்றில் கடக்கும் போது முதல் சுற்றில் ஏற்பட்ட அனுபவத்தினால் மிக கவனமாகவும் ஒரு தெளிவுடனும் கடப்பதால் நமக்கு பெரும்பாலும் நல்ல பலன்கள் கிடைக்கின்றன எனவே பொங்கு சனி நல்லவற்றை செய்கிறது என்று எடுத்து கொள்கிறோம்.

அதற்கு அடுத்து வரும் மூன்றாம் சுற்றில் கங்கு சனி காலத்தில் நாம் ஒரு பண்பட்ட மனிதராக இருக்க வாய்ப்புகள் அதிகம் மற்றும் நம் வாழ்வின் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்க வேண்டிய நிலையில் உள்ளதால் பெரும்பாலும் போதும் என்ற மனநிலையில் இருப்பதால் இந்த சுற்றில் இறுதி கட்டத்தை நோக்கியே இருக்கும்.

ஏற்கனவே வெளியிட்ட சனிபகாவன் பெயர்ச்சி பலன்கள் ராசியின் அடிப்படையில் கணிக்கப்பட்ட பொதுவான பலன்களே உங்கள் ஜனன ஜாதகம் வலுவுள்ளதாக இருந்தாலும் / தசா புத்திகள் வலுவாக இருந்தாலும் / கோட்சார வேதை, விபரீத வேதை செயல்பட்டாலும் பலன்களில் மாற்றம் / தடை ஏற்படும். அதுபோல மற்ற கிரகங்களின் பெயர்ச்சியும் மாற்றங்கள் தரும்.எனவே ஜனன ஜாதகத்துடன் ஜோதிடரை அணுகி பூரண பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

நன்றி

ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடலயம்

9790126877
8778797914

Comments are closed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More