General Benefits of Guru Peyachi 2022 Simma Rasi

குருபகவான் பெயர்ச்சி பொது பலன்கள் 2022 to 2023 சிம்ம ராசி

சிம்ம ராசி குருபகவான்_பெயர்ச்சி பொது பலன்கள் (2022-2023)

திருக்கணித பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 24.31 நாழிகைக்கு பகல் 03:49 அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வாக்கிய பஞ்சாங்க முறைப்படி

பங்குனி மாதம் 30ஆம் தேதி (13.04.2022) புதன்கிழமை சூர்ய உதயாதி 55.22 நாழிகை அளவில் குருபகவான் அதிசாரமாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்

வரும் 13.04.2022 முதல் 21.04.2023 வரை உங்கள் ராசிக்கு குரு பகவான் அட்டம ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 8 ஆம் இடத்திற்கு பெயர்ச்சியாகி அட்டம குருவாகிறார்.

“இன்மை எட்டினில் வாலி பட்டம் இழந்து போகும்ம்படி யானதும்”

இதன் பொருள் வாலி பட்டம் இழந்த காலம் எனவே எந்த வகையிலும் இழப்பீடு என்பது இருந்தே தீரும். அட்டம குரு தொட்டது துலங்காது என்பார்கள்.

” கேளப்பா எட்டுக்கு வேசி கள்ளன் கெடுதியுள்ள மனைவியும் பகை நோயால் கண்டம் ஆளப்பா பகையுடன் பொருள்சேதம் அப்பனே அவமானம் கொள்வான்”

இது புலிப்பாணி பாடல்

  • இதன் பொருள் பொருள் இழப்பீடு புகழ் இழப்பீடு உயிர் இழப்பீடு ஆகிய இழப்பீடுகள் உண்டு. புதிய முயற்சிகளில் தடை தாமதம் சுபகாரியத் தடை விரும்பத்தகாத இடமாற்றம் பிள்ளைகளால் கொள்ளை ஆகியவை ஏற்படலாம்.
  • நிம்மதியான உறக்கம் ஏற்படும் தண்டச் செலவுகள் குறையும் மருத்துவமனை செலவுகள் குறையும் காலகட்டம்
  • தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டிய காலகட்டம். தங்கம் நிலம் சார்ந்த வகைகளில் முதலீடு செய்யலாம். வங்கிகளில் முதலீடு செய்யலாம். புதிய மனை வீடு இவைகளில் முதலீடு செய்யலாம்.
  • உறுதியற்ற / தனியார் வசம் / இனம்தெரியாத / உறவினர் நண்பர்கள் வழியில் முதலீடுகளை செய்வதை தவிர்க்க வேண்டும். கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்க வேண்டிய காலகட்டம்.
  • பங்குசந்தைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
  • வெளிநாடு பயணங்கள்/ தூர பயணங்கள் /கடல்கள் தாண்டி பயணங்கள் ஏற்படும்.
  • தேவைக்கேற்ப தன வரவுகள் இருந்துகொண்டே இருக்கும். கையில் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.
  • கண் சம்பந்தப்பட்ட புரை, பார்வை பாதிப்புக்கள் அறுவைச் சிகிச்சை மூலம் சரியாகும் காலகட்டம்.
  • திருமணம் தடை பட்டிருந்தவர்களுக்கு பேச்சுவார்த்தைகள் நடந்து திருமணம் இந்த ஐந்து மாதத்திற்குள் முடிவாகும் / திருமணம் நடந்தேறும்.
  • வாக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டிய காலகட்டம்.
  • ஆரம்பக் கல்வி படிக்கும் மாணவ மாணவியர்கள் கவன சிதறல்கள் குறையும், படிப்புகள் நன்றாக அமையும் மற்றும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் காலம்
  • பட்டப்படிப்பு மாணவ மாணவியர்களின் படிப்புகள் நன்றாக அமையும்
  • குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் சுபமான முடிவுகள் எடுக்கும் நிலை ஏற்படும்.
  • புதிய வீடு மனை வண்டி வாகன வசதிகள் ஏற்படும்.
  • வீடுகளுக்கு பராமரிப்புச் செலவுகள், விரிவாக்கம் ஆகியவை ஏற்படும்.
  • வாடகை வீட்டில் இருப்பவர்கள் வசதியான வீட்டுக்கு மாறவேண்டிய சூழல் ஏற்படும் / ஒத்திக்கு செல்லவேண்டிய வாய்ப்பும் உண்டாகும்.
  • சிலருக்கு தன்னுடைய சொந்த வீட்டிற்கு மாறவேண்டிய வாய்ப்பு உண்டாகும்.
  • தொழில் வியாபாரம் செய்பவர்கள் புதிய இயந்திரங்களை வாங்கி நிறுவ வேண்டிய காலகட்டமாக இருக்கும். இப்படி முதலீடு செய்யும் போது மிக கவனமாக செய்ய வேண்டும். தேவையில்லாத இயந்திரங்களை வாங்கி அவதி பட கூடாது.
  • வண்டி வாகன பயணங்களில் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்.
  • உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம்.
  • பண விஷயங்களில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டிய காலகட்டம்.

பரிகாரம்:

திருச்செந்தூர் முருகனுக்கு வியாழக்கிழமையன்று பால் அபிஷேகம் அல்லது சந்தன காப்பு செய்து வழிபாடு செய்வது
வியாழன்தோறும் குரு ஓரையில் நவகிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய சிறப்பு
அந்தணர்களுக்கு அல்லது அந்தனர் குழந்தைகளுக்கு வஸ்திர தானம் படிப்புக்குத் தேவையான உதவிகள் செய்வது நன்மையளிக்கும்.
ஒருமுறை யானைக்கு கரும்பு கட்டு வாங்கித்தர பல பிரச்னைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் அல்லது கோவிலில் ஒரு நாள் ஆகாரத்துக்கு பணம் கட்டினால் சிறப்பு

எச்சரிக்கை:

மேற்கண்ட பலன்கள் அனைத்தும் பொதுபலன்கள் மட்டுமே. உங்கள் ஜனன ஜாதக வலுவும், கிரகங்களின் வலுவும், தசா புத்தி பலன்கள், மற்ற கிரகங்களின் பெயர்ச்சிகளைப் பொறுத்து பலன்களில் மாற்றம் உண்டாகும். எனவே புதிய காரியங்களை தொடங்கும் பொழுது உங்கள் ஜோதிடரை அல்லது என்னை தொடர்பு உண்டு விளக்கம் பெற்று புது காரியங்களை செய்வது சிறப்பாகும்

Blog at WordPress.com.

%d