விளம்பி வருட பலன் விருச்சிக ராசி
விருச்சிக ராசி (60%)
============
இந்த வருடம் புரட்டாசி மாதம் வரை குரு பகவான் சாதகமாக இல்லை,
வருடம் முழுவதும் சனி பகவான் சாதகமான நிலையில் இல்லை எனவே கவனமுடன் இருக்க வேண்டிய கால கட்டம்
💑 விரைய குருவாக இருப்பதால் உங்களுக்கு சுப செலவுகள் நடக்கும் காலமாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு திருமணம் நடந்தேறும் காலம். சுப விரையங்கள் எற்பட்டு கொண்டே இருக்கும். குழந்தைகள் படிப்பு செலவுகள் அதிகரிக்கும். கடன்கள் அடைபடும். கடன்கள் இருந்தால் இப்பொழுதே தீர்த்து கொள்ளுங்கள் இல்லையெனில் புரட்டாசிக்கு பிறகு வம்பு வழக்கு சிறை தன்டனையில் சிக்குவீர்கள்
🏠 விரைய செலவு காலம் ஆதாலால் சுப செலவாக வீடு/மனை வாங்கி கொள்ள உத்தமம். பூர்வீக சொத்துகள் உங்களுக்கு சாதகமாக முடியும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் விற்று புதிய இடத்தில் மாறும் வாய்ப்புகள் உண்டாகும்
🛵🚗 வண்டி வாகனம் வாங்குவதை தவிர்த்து சொத்துகள் வாங்குவதில் கவனம் செலுத்தலாம்.
📖கவனமுடன் படிக்க வேண்டிய காலம். எதிர்பார்த்த அளவு தேர்வில் மதிப்பெண்கள் கிடைக்காது. விரும்பிய மேல் படிப்பு அமையாது
தேவையில்லாத விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நலம்
⚖வியாபாரம்/தொழில் விஸ்தரிப்பு செய்வதை நிறுத்தி வைக்கலாம். இருக்கும் வேலையை விடாமல் இருப்பது நலம். வேலை இழப்பு/பதவி பறிபோகும் காலம். கடன்கள் வசூலாகது. பாக்கிகள் கூடி கொண்டே போகும் காலம். சரக்குகள் தேங்கும்.
🕉 புண்ணிய ஸ்தல தர்சனம் உண்டாகும்
🔘புரட்டாசிக்கு பிறகு தொழில் சிந்தித்து தான் வெற்றி பெற முடியும். வேலை மாற்றம்/இடமாற்றம் உண்டாகும் காலம் எனவே அதை எற்று கொண்டு செய்ல்பட சிறப்பு உண்டாகும் இல்லையெனில் பதவி பறிபோகும். கடுமையாக உழைக்க வேண்டிய காலம். உழைப்புக்கேற்ற சம்பளம் கிடைக்காத காலம். மாணவ மாணவிகள் படிப்பு சிரத்தையுடன் படிக்கவேண்டிய காலம். பனப்பற்றாகுறை தொடரும். கையில் உள்ள பணம் விரையம் ஆகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். அதிக மன உழைச்சல் உண்டாகும்
பரிகாரம்
=======
குரு பகவான், சனி பகவானுக்கு விளக்கிட்டு தர்சனம் செய்ய வேண்டும்
திருச்செந்தூர் முருகன் தர்சனம் மற்றும் பாலாபிஷேகம்
கோவில் வேத பாட சாலைக்கு வேண்டிய பொருளை தானம் செய்ய மிகுந்த சிறப்பு
மேற்குறிப்பிட்ட பலன்கள் பொதுப்பலன்களே தங்களுடைய பிறந்த ஜாதக வலு, தசா புத்திகள் மற்ற கோச்சார கிரக பெயர்ச்சிகளை பொருத்து மாற்றம் உண்டாகும்
நன்றி
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்
97901 26877
87787 97194